Sri Lanka vs Pakistan: நடையை கட்டுமா பாகிஸ்தான்? ரன் ரேட் யாருக்கு சாதகம்?

By Rsiva kumar  |  First Published Sep 14, 2023, 4:51 PM IST

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 5ஆவது போட்டியானது மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் 5ஆவது போட்டி இன்று நடக்கிறது. ஆனால், போட்டி நடக்கும் கொழும்பு மைதானத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் இதுவரையில் டாஸ் போடப்படவில்லை. பிற்பகல் 3 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மைதானம் முழுவதும் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

PAK vs SL, Colombo Rain: கனமழையால் டாஸ் போடுவதில் சிக்கல்: பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா?

Tap to resize

Latest Videos

இதுவரையில் மழை நிற்கவில்லை. ஒருவேளை மழை நின்றால் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 20 ஓவர் போட்டிக்கான கட்-ஆஃப் நேரம் இரவு 9 மணி ஆகும். மாறாக போட்டியே நடத்தப்படவில்லை என்றால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படும். அப்படி பகிர்ந்து அளிக்கப்பட்டால் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள இலங்கை நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியேறும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகாசி பட்டாசு மாதிரி வெடித்து தள்ளிய பென் ஸ்டோக்ஸ்: ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை!

பாகிஸ்தான் அணியில் ஹரிஷ் ராஃப், நசீம் ஷா மற்றும் அகா சல்மான் ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நசீம் ஷாவிற்குப் பதிலாக, ஜமான் கானும், ஃபஹர் ஜமானுக்குப் பதிலாக முகமது வாசீம் ஜூனியர் முகமது ஹரீஷ் மற்றும் அகா சல்மானுக்குப் பதிலாக சௌத் சஹீல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் முகமது நவாஸ் ஆகியோர் இடம் பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானை விட இலங்கை உடன் தான் இந்தியா சிறப்பாக விளையாடியது – கௌதம் காம்பீர்!

 

Heavy rain in Colombo...!!!!

If it's a wash-out then Pakistan is out of Asia Cup.pic.twitter.com/6UbX7cDVLM

— Johns. (@CricCrazyJohns)

 

click me!