
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.
துபாயில் நடக்கும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. துபாயில் இலக்கை விரட்டிய அணிகள் தான் பெரும்பாலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதுமட்டுமல்லாது இலங்கையும் டி20 கிரிக்கெட்டில் இலக்கை விரட்டினால் தான் ஜெயிக்கிறதே தவிர, முதல் பேட்டிங் ஆடினால் தோற்றுப்போகிறது.
இதையும் படிங்க - ஆசிய கோப்பை தோல்விக்கு இதுதான் காரணம்..! ரோஹித், டிராவிட்டை விளாசிய முன்னாள் வீரர்
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி சூப்பர் 4 போட்டியிலும் இலங்கை அணி டாஸ் வென்று இலக்கை விரட்டியபோதுதான் வெற்றி பெற்றது. எனவே ஃபைனலில் டாஸ் தோற்றது இலங்கைக்கு சற்றே பின்னடைவுதான். இலங்கை அணியை முதலில் பேட்டிங் ஆடுவது மனதளவில் பாதிக்காத பட்சத்தில், பெரிய ஸ்கோர் அடித்து கடின இலக்கை நிர்ணயித்தால் வெற்றி பெறலாம்.
ஆனால் பாகிஸ்தான் டாஸ் வென்றதன் மூலம், கோப்பையில் ஒரு கையை வைத்துவிட்டது என்றே கூறவேண்டும். ஏனெனில் இலக்கை விரட்டுவதில் பாகிஸ்தானும் சிறப்பாக செயல்படுகிறது. அந்த அணிக்கும் அதுவே எளிதாக இருக்கிறது. எனவே டாஸ் வென்றது பாகிஸ்தானுக்கு கூடுதல் பலம்.
பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி..! ஆர்பி சிங்கின் 2 சர்ப்ரைஸ் தேர்வுகள்
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்ஷனா, பிரமோத் மதுஷன், தில்ஷான் மதுஷங்கா.