AUS vs NZ: கடைசி ODI-யிலும் வெற்றி.. நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா

By karthikeyan VFirst Published Sep 11, 2022, 6:37 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
 

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்தது.

ஒருநாள் கிரிக்கெட்டில் தனது கடைசி போட்டியை ஆடினார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை ஃபைனலுக்கு முன் பாகிஸ்தானை எச்சரிக்கும் வாசிம் அக்ரம்..! இலங்கையை கண்டு பயப்படும் பாகிஸ்தான்

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஆரோன் ஃபின்ச் தனது கடைசி போட்டியில் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் இங்லிஸும் 10 ரன்களுக்கே வெளியேறினார். 

அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - லபுஷேன் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி 3வது விக்கெட்டுக்கு 118 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த லபுஷேன், 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 12வது சதத்தை விளாசினார். 131 பந்தில் 106 ரன்களை குவித்தார் ஸ்மித்.  அலெக்ஸ் கேரி 43 ரன்கள் அடித்தார். கேமரூன் க்ரீன் 12 பந்தில் 25 ரன்கள் அடித்து மிரட்டலாக முடிக்க, 50 ஓவரில் 267 ரன்கள் அடித்தது.

268 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன் (35), டெவான் கான்வே (21), கேன் வில்லியம்சன் (27) ஆகியோருக்கு நல்ல தொடக்கம் கிடைத்தும் அவர்கள் அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் ஆட்டமிழந்து வெளியேறினர். டாம் லேதம் (10), டேரைல் மிட்செல்(16) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி..! ஆர்பி சிங்கின் 2 சர்ப்ரைஸ் தேர்வுகள்

அதன்பின்னர் க்ளென் ஃபிலிப்ஸ்(47), ஜிம்மி நீஷம் (36), மிட்செல் சாண்ட்னெர்(30) ஆகிய மூவரும் நன்றாக ஆடினர். ஆனால் அவர்களால் ஆட்டத்தை கடைசி வரை எடுத்து செல்ல முடியவில்லை. 49.5 ஓவரில் நியூசிலாந்து அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடரை வென்றது.

click me!