
இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்ற நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது.
முதல் 2 நாள் ஆட்டங்கள் வெவ்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட நிலையில், 3ம் நாள் தான் போட்டியே தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் நலன் கருதி அதிரடி முடிவு..! குஷியில் கோலி.. பீதியில் ராகுல்
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க வீரர்கள், இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஆலி ராபின்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடிடம் சரணடைந்தனர். ஆலி ராபின்சன் அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்த, பிராட் 4 விக்கெட்டுகளை வீழ்த்த முதல் இன்னிங்ஸில் வெறும் 118 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்க அணி. அந்த அணியில் அதிகபட்சமாகவே மார்கோ யான்சென் தான் 30 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியில் ஆலி போப் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த போப் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையும் படிங்க - ஆசிய கோப்பை தோல்விக்கு இதுதான் காரணம்..! ரோஹித், டிராவிட்டை விளாசிய முன்னாள் வீரர்
தென்னாப்பிரிக்க அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மார்கோ யான்சென் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
30 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 4ம் நாள் மதிய உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் அடித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய தென்னாப்பிரிக்க அணி 2வது இன்னிங்ஸில் சுதாரிப்புடன் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர் எர்வீ 23ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் டீன் எல்கர்(35) மற்றும் கீகன் பீட்டர்சன் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர்.