ஆசிய கோப்பை ஃபைனலுக்கு முன் பாகிஸ்தானை எச்சரிக்கும் வாசிம் அக்ரம்..! இலங்கையை கண்டு பயப்படும் பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Sep 11, 2022, 4:02 PM IST
Highlights

ஆசிய கோப்பை ஃபைனலில் இலங்கையும் பாகிஸ்தானும் மோதும் நிலையில், பாகிஸ்தான் அணியை எச்சரித்துள்ளார் வாசிம் அக்ரம்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில், இன்றுடன் முடிவடைகிறது. பாகிஸ்தான் - இலங்கை அணிகள் ஃபைனலுக்கு முன்னேறின.

இன்று துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி தொடங்குகிறது. இந்த இறுதிப்போட்டிக்கு முன்னோட்டமாக சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், அந்த போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் நலன் கருதி அதிரடி முடிவு..! குஷியில் கோலி.. பீதியில் ராகுல்

துபாயில் டாஸ் வெல்லும் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்கிறது. இலக்கை விரட்டும் அணி தான் பெரும்பாலும் துபாயில் ஜெயிக்கிறது. எனவே டாஸ் வென்றாலே பாதி ஜெயித்தது மாதிரிதான். இலங்கை அணி இலக்கை விரட்டினால் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலும் ஜெயிக்கிறது. முதலில் பேட்டிங் ஆடினால் தோற்றுவிடுகிறது. அதிலும் துபாயில் இலக்கை விரட்டும் அணிகள் தான் ஜெயிக்கின்றன. எனவே டாஸ் இந்த போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தனும் இலங்கையும் ஃபைனலில் மோதும் நிலையில், பாகிஸ்தான் அணியை எச்சரித்துள்ளார் வாசிம் அக்ரம். 

ஃபைனல் குறித்து பேசிய வாசிம் அக்ரம், ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி அபாரமாக விளையாடியது. இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் ஒரு துடிப்பு இல்லை. ஆனால் பவுலிங் பரவாயில்லமால் இருந்தது. பாகிஸ்தான் அணி செய்த தவறிலிருந்து பாடம் கற்றிருக்கும் என நம்புகிறேன். ஃபைனலில் பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என நம்புகிறேன். அதேவேளையில் இளம் வீரர்களை கொண்ட இளம் துடிப்பான அணியாக இருக்கும் இலங்கையை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. ஆஷிஷ் நெஹ்ராவின் அதிரடி தேர்வு..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை

பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இலங்கைக்கு எதிராக ரிஸ்வான் விரைவில் ஆட்டமிழந்ததால், அது உண்மை தான் என்பது புலப்பட்டது. ஃபைனல் நடக்கும் பிட்ச் நல்ல பிட்ச். எனவே பாகிஸ்தான் அணி வலுவாக கம்பேக் கொடுக்கும் என்று வாசிம் அக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

click me!