AUS vs NZ: ஸ்டீவ் ஸ்மித் அபார சதம்.. கடைசி ஒருநாள் போட்டியில் நியூசி.,க்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆஸி.,

By karthikeyan VFirst Published Sep 11, 2022, 2:21 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 50 ஓவரில் 267 ரன்கள் அடித்து, 268 ரன்கள்  என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
 

நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியுடன் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி..! ஆர்பி சிங்கின் 2 சர்ப்ரைஸ் தேர்வுகள்

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஆரோன் ஃபின்ச் தனது கடைசி போட்டியில் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜோஷ் இங்லிஸும் 10 ரன்களுக்கே வெளியேறினார். 

அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் - லபுஷேன் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி 3வது விக்கெட்டுக்கு 118 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த லபுஷேன், 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 12வது சதத்தை விளாசினார். 131 பந்தில் 106 ரன்களை குவித்தார் ஸ்மித். 

இதையும் படிங்க - ஸ்டூவர்ட் பின்னி அதிரடி அரைசதம், யூசுஃப் பதான் காட்டடி ஃபினிஷிங்! 20ஓவரில் 217ரன்களை குவித்த இந்தியா லெஜண்ட்ஸ்

அலெக்ஸ் கேரி 43 ரன்கள் அடித்தார். கேமரூன் க்ரீன் 12 பந்தில் 25 ரன்கள் அடித்து மிரட்டலாக முடிக்க, 50 ஓவரில் 267 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய அணி, 268 ரன்கள்  என்ற சவாலான இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. அந்த இலக்கை நியூசிலாந்து அணி விரட்டிவருகிறது.

click me!