ஸ்டூவர்ட் பின்னி அதிரடி அரைசதம், யூசுஃப் பதான் காட்டடி ஃபினிஷிங்! 20ஓவரில் 217ரன்களை குவித்த இந்தியா லெஜண்ட்ஸ்

By karthikeyan VFirst Published Sep 10, 2022, 9:52 PM IST
Highlights

ஸ்டூவர்ட் பின்னினியின் அதிரடி அரைசதம் மற்றும் யூசுஃப் பதானின் காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 217 ரன்களை குவித்த இந்தியா லெஜண்ட்ஸ் அணி, 218 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

சர்வதேச கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் சாலை பாதுகாப்பு டி20 லீக் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளின் முன்னாள் ஜாம்பவான்கள் கலந்துகொண்டு விளையாடுகின்றனர். 

இதையும் படிங்க -டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. ஆஷிஷ் நெஹ்ராவின் அதிரடி தேர்வு..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை

கான்பூரில் இன்று முதல் போட்டிகள் நடக்கின்றன. இன்று நடந்துவரும் முதல் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் (16) மற்றும் நமன் ஓஜா (21) ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 3ம் வரிசையில் இறங்கிய சுரேஷ் ரெய்னா 33 ரன்கள் அடித்தார்.

4ம் வரிசையில் இறங்கிய ஸ்டூவர்ட் பின்னி அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடிக்க, யுவராஜ் சிங் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ஸ்டூவர்ட் பின்னி 42 பந்தில் 5 பவுண்டரிகள்  மற்றும் 6 சிக்ஸர்களுடன் 82 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 

இதையும் படிங்க - கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் காயமடைந்த ஜடேஜா..! ரோஹித், டிராவிட் செம கடுப்பு.. பிசிசிஐ அதிருப்தி

6ம் வரிசையில் இறங்கிய யூசுஃப் பதான், அவர் ஆடிய காலக்கட்டத்தில் எப்படி ஆடினாரோ, அதேபோலவே அதிரடியாக ஆடி 15 பந்தில் 4 சிக்ஸர்களுடன் 35 ரன்களை விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். இதையடுத்து 20 ஓவரில் 217 ரன்களை குவித்த இந்தியா லெஜண்ட்ஸ் அணி, 218 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸுக்கு நிர்ணயித்தது.
 

click me!