ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிக்கலாம்.! ஓய்வு அறிவித்த ஆரோன் ஃபின்ச்சின் தேர்வு

By karthikeyan VFirst Published Sep 10, 2022, 8:23 PM IST
Highlights

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று கருத்து கூறியிருக்கிறார்.
 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான ஆரோன் ஃபின்ச், 2015 ஒருநாள் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார். 145 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்கள் மற்றும் 30 அரைசதங்களுடன் 5041 ரன்களை குவித்துள்ளார்.

2018ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் தடை பெற, அப்போதிலிருந்து ஆஸ்திரேலிய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியை ஏற்ற ஆரோன் ஃபின்ச், 54 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியுள்ளார். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் நலன் கருதி அதிரடி முடிவு..! குஷியில் கோலி.. பீதியில் ராகுல்

நியூசிலாந்துக்கு எதிரான நடப்பு ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என வென்றிருக்கும் நிலையில், நாளை நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ஆரோன் ஃபின்ச்.

எனவே ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சியை மீண்டும் ஏற்க முடியாது. டேவிட் வார்னரும் கேப்டனாக முடியாது. எனவே டெஸ்ட் கேப்டனாக செயல்படும் பாட் கம்மின்ஸ் தான் நல்ல ஆப்சனாக இருப்பார். ஆனால் அவரோ வெள்ளைப்பந்து அணிகளை வழிநடத்தும் ஐடியா தனக்கு இல்லை என ஒருமுறை கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி.. ஆஷிஷ் நெஹ்ராவின் அதிரடி தேர்வு..! சீனியர் வீரருக்கு அணியில் இடம் இல்லை

இந்நிலையில், அடுத்த கேப்டன் குறித்து பேசியுள்ள ஆரோன் ஃபின்ச், ஸ்மித் கேப்டனாக முடியாது என நினைக்கிறேன். பாட் கம்மின்ஸால் நிர்வகிக்க முடியும் என நம்புகிறேன். எனவே டெஸ்ட் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுவரும் பாட் கம்மின்ஸையே ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கலாம் என்று ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.
 

click me!