ஆசிய கோப்பை தோல்விக்கு இதுதான் காரணம்..! ரோஹித், டிராவிட்டை விளாசிய முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Sep 11, 2022, 5:34 PM IST
Highlights

ஆசிய கோப்பையில் இந்திய அணி தோற்றதற்கு தவறான அணி தேர்வு தான் காரணம் என்று திலீப் வெங்சர்க்கார் இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்துள்ளார்.
 

ஆசிய கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான்  மற்றும் இலங்கை அணிகளிடம் தோற்று ஃபைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், இந்திய அணியின் ஆசிய கோப்பை தோல்வி, அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த தோல்வி டி20 உலக கோப்பையில் இந்திய அணியை எந்தவகையிலும் பாதிக்காது என்றாலும், ஜெயித்திருக்க வேண்டிய ஆசிய கோப்பையை தோற்றது ஏமாற்றம் தான்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை ஃபைனலுக்கு முன் பாகிஸ்தானை எச்சரிக்கும் வாசிம் அக்ரம்..! இலங்கையை கண்டு பயப்படும் பாகிஸ்தான்

இந்திய அணி சரியான, வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்யாததுதான் என்ற அதிருப்தி அனைவருக்கும் உள்ளது. தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்தும் ஆடும் லெவனில் சரியாக பயன்படுத்தாதது, ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்தே 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியது, திடீரென மீண்டும் அஷ்வினை ஆடவைத்தது, ஷமியை அணியிலேயே எடுக்காதது, தீபக் சாஹரை அணியில் எடுத்தும் அவரை பந்துவீசவைக்காதது, அவரை பந்துவீசவைக்கவில்லை என்றால் அதற்கு தினேஷ் கார்த்திக்கையே எடுத்திருக்கலாம் என்று அணி தேர்வு குறித்து பல்வேறு அதிருப்திகள் உள்ளன.

டி20 உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி ஆடும் லெவனை உறுதி செய்யாமல், ஆசிய கோப்பையிலும் பரிசோதனைகளை செய்தது பல முன்னாள் வீரர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள முன்னாள் வீரர் திலீப் வெங்சர்க்கார், இந்திய அணி பரிசோதனைகளை செய்துகொண்டே இருக்கிறது. தினேஷ் கார்த்திக்கை ஆசிய கோப்பைக்கான அணியில் எடுத்துவிட்டு அவரை ஆடவைக்கவில்லை. திடீரென அஷ்வினை இலங்கைக்கு எதிராக இறக்கிவிட்டார்கள். இந்திய அணி நிர்வாகம் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளிக்க விரும்புகிறது. 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் நலன் கருதி அதிரடி முடிவு..! குஷியில் கோலி.. பீதியில் ராகுல்

ஆனால் அடுத்த மாதம் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில் இந்நேரம் சிறந்த லெவனை உறுதி செய்திருக்க வேண்டும். ஆசிய கோப்பையே பெரிய தொடர் தான். அதில் வெற்றி பெற்றிருந்தால் அணியின் சூழல் சிறப்பாக இருந்திருக்கும். ஆசிய கோப்பை, உலக கோப்பை மாதிரியான பெரிய தொடர்களில் வெற்றி பெறுவது அவசியம் என்றார் திலீப் வெங்சர்க்கார்.
 

click me!