PAK vs ENG 3வது டி20 டாஸ் ரிப்போர்ட்.. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் அறிமுகம்

Published : Sep 23, 2022, 08:04 PM IST
PAK vs ENG 3வது டி20 டாஸ் ரிப்போர்ட்.. இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் அறிமுகம்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.  

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.

3வது டி20 போட்டி இன்று கராச்சியில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார். பாகிஸ்தான் அணி இலக்கை விரட்டுவதில் வல்லமை பெற்ற அணி. 2வது டி20யில் கூட, 200 ரன்கள் என்ற இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்து ஜெயித்தது. எனவே டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணி.

இதையும் படிங்க - பல வருஷமா இருக்கும் அந்த பலவீனத்தை சரி செய்யலைனா இந்திய அணி டி20 உலக கோப்பையை ஜெயிக்க முடியாது - கவாஸ்கர்

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஹைதர் அலி, ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், ஷாநவாஸ் தஹானி, முகமது ஹஸ்னைன், ஹாரிஸ் ராஃப், உஸ்மான் காதிர்.

இங்கிலாந்து அணியில் வில் ஜாக்ஸ் என்ற தொடக்க வீரர் அறிமுகமாகியுள்ளார். அலெக்ஸ் ஹேல்ஸுக்கு பதிலாக வில் ஜாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் அறிமுகமாகும் வில் ஜாக்ஸிற்கு சாம் கரன் தொப்பியை வழங்கினார்.

இதையும் படிங்க - IND vs AUS: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கரன், லியாம் டாவ்சன், அடில் ரஷீத், மார்க் உட், ரீஸ் டாப்ளி.
 

PREV
click me!

Recommended Stories

ஒரே போட்டியில் 5 சாதனைகள்! யுவராஜ், ரோஹித்தை ஓரங்கட்டிய அபிஷேக் சர்மா
IND vs NZ T20: இதுக்கு மேல சான்ஸ் இல்ல‌.. சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்?.. இளம் வீரருக்கு நிரந்தர இடம்!