இதான்டா பாகிஸ்தான்.. மார்தட்டும் அக்தர்..! பாராட்டோடு குட்டும் வைத்த அக்தர்

By karthikeyan VFirst Published Sep 23, 2022, 7:25 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணியை பெருமையாக பேசியுள்ளார் ஷோயப் அக்தர்.
 

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் அருமையாக ஆடிவருகிறது. கடந்த டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதியில் தோற்று வெளியேறியது. ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையிலும் பாகிஸ்தான் அணி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பாகிஸ்தான் அணி பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் வலுவான அணியாக திகழ்ந்தாலும், பேட்டிங்கில் டாப் ஆர்டரை வெகுவாக சார்ந்திருப்பதும், மிடில் ஆர்டர்  பலவீனமும் அந்த அணியின் பிரச்னையாக உள்ளது. மேலும் இலக்கை எளிதாக விரட்டி வெற்றி பெறும் பாகிஸ்தான் அணியால் முதலில் பேட்டிங் ஆடி இலக்கை கட்டுப்படுத்தினால் ஜெயிக்க முடியவில்லை.

இதையும் படிங்க - ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் யார் இந்திய அணியில் ஆடணும்? கில்கிறிஸ்ட்டே சொல்லிட்டார்.. கேளுப்பா ரோஹித்

ஆசிய கோப்பையில் பாபர் அசாம் சரியாக ஆடாததும், முகமது ரிஸ்வானின் மந்தமான பேட்டிங்கும், மிடில் ஆர்டரின் சொதப்பலும் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எளிதாக இலக்கை விரட்டவல்ல பாகிஸ்தான் அணி, ஆசிய கோப்பை ஃபைனலில் இலங்கைக்கு எதிராக இலக்கை விரட்டமுடியாமல் தோற்று கோப்பையை இழந்தது.

இதையடுத்து பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் ஆட்டத்தை விமர்சித்தனர். ஷோயப் அக்தர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டர், முகமது ரிஸ்வானின் பேட்டிங் அணுகுமுறை ஆகியவற்றை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் 2வது போட்டியில் 200 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து பாகிஸ்தான் அணியை புகழ்ந்து பேசியுள்ளார் அக்தர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 200 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் இணைந்து 200 ரன்களை அடித்துவிட்டனர். அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த பாபர் அசாம் 66 பந்தில் 110 ரன்களை குவித்தார். ரிஸ்வான் 88 ரன்களை குவித்தார். விக்கெட் இழப்பின்றி 200 ரன்கள் என்ற இலக்கை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இதுகுறித்து பேசிய ஷோயப் அக்தர், பாகிஸ்தான் அணி இலக்கை விரட்டும்போது விக்கெட்டை இழக்காமல் அடித்து வெற்றி பெறுகிறது. இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. 

இதையும் படிங்க - இந்திய அணி கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் டிராவிட் மீது பிசிசிஐ தலைவர் கங்குலி அதிருப்தி..?

ரிஸ்வான் - பாபர் அசாம் ஆகிய இருவருமே சிறப்பாக ஆடுகின்றனர். ஆனால் மிடில் ஆர்டர் தான் பலவீனமாக உள்ளது. துணைக்கண்டத்தில் இரு அணிகளுமே 200 ரன்கள் அடிப்பது என்பது எளிதானது என்று அக்தர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியை அக்தர் பாராட்டினாலும், மிடில் ஆர்டர் பிரச்னையை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

click me!