சாதனை நாயகன் விராட் கோலியின் சாதனையையே தகர்த்தெறிந்த பாபர் அசாம்

Published : Sep 23, 2022, 04:29 PM IST
சாதனை நாயகன் விராட் கோலியின் சாதனையையே தகர்த்தெறிந்த பாபர் அசாம்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் சதமடித்த பாபர் அசாம், டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார்.  

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வளர்ந்துள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், ஆசிய கோப்பையில் பாபர் அசாம் சரியாக ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு கவலையளித்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார்.

இதையும் படிங்க - ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் யார் இந்திய அணியில் ஆடணும்? கில்கிறிஸ்ட்டே சொல்லிட்டார்.. கேளுப்பா ரோஹித்

இங்கிலாந்து நிர்ணயித்த 200 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி பாபர் அசாமின் அதிரடி சதத்தால் அந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபர் அசாம் 66 பந்தில் 110 ரன்களை குவித்தார். 

இந்த சதத்துடன் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். சர்வதேச டி20 மற்றும் டி20 லீக்குகள் என மொத்தமாக சேர்த்து டி20 கிரிக்கெட்டில் 8000 ரன்களை எட்டியுள்ளார். 218 டி20 இன்னிங்ஸ்களில் 8000 ரன்களை குவித்துள்ளார். 

இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் விரைவில் 8000 ரன்களை எட்டிய 2வது வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். பாபர் அசாம் 218 டி20 இன்னிங்ஸ்களில் 8000 ரன்களை அடித்துள்ளார். 243 இன்னிங்ஸ்களில் 8000 ரன்களை எட்டிய விராட் கோலியின் சாதனையை முறியடித்து பாபர் அசாம் 2ம் இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க - IND vs AUS: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்

இந்த பட்டியலில் 214 இன்னிங்ஸ்களில் 8000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டி கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் முறையே 4 மற்றும் 5ம் இடங்களில் உள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!