PAK vs ENG 2வது டி20: பாபர் அசாம் அதிரடி சதம்.. கடின இலக்கை விக்கெட் இழப்பின்றி அடித்து வெற்றிபெற்ற பாகிஸ்தான்

By karthikeyan VFirst Published Sep 23, 2022, 2:18 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பாபர் அசாமின் அதிரடி சதம் மற்றும் முகமது ரிஸ்வானின் அதிரடி பேட்டிங்கால் விக்கெட் இழப்பின்றி 200 ரன்கள் என்ற இலக்கை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி கராச்சியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கரன், டேவிட் வில்லி, லூக் உட், லியாம் டாவ்சன், அடில் ரஷீத்.

இதையும் படிங்க -  இந்திய அணி கேப்டன் ரோஹித், பயிற்சியாளர் டிராவிட் மீது பிசிசிஐ தலைவர் கங்குலி அதிருப்தி..?

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஹைதர் அலி, ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், ஷாநவாஸ் தஹானி.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 26 ரன்களும், ஃபிலிப் சால்ட் 30 ரன்களும் அடித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். டேவிட் மலான் முதல் பந்திலேயே டக் அவுட்டானார். 

4ம் வரிசையில் இறங்கிய பென் டக்கெட் அதிரடியாக பேட்டிங் ஆடி 22 பந்தில் 7 பவுண்டரிகளுடன் 43 ரன்களை விளாசினார். ஹாரி ப்ரூக் 19 பந்தில் 31 ரன்களும், அடித்து ஆடிய கேப்டன் மொயின் அலி, 22 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 55 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 199 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 200 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.

இதையும் படிங்க - இந்திய அணி இவரை ஏன் டீம்ல வச்சுருக்காங்கனே தெரியல - மேத்யூ ஹைடன்

200 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். ஆசிய கோப்பையில் பாபர் அசாம் சரியாக ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு கவலையளித்த நிலையில், இந்த போட்டியில் அபாரமாக பேட்டிங்  ஆடி சதமடித்தார். 66 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 110 ரன்களை குவித்தார்.  அரைசதம் அடித்த ரிஸ்வான், 51 பந்தில் 88 ரன்களை குவிக்க, விக்கெட் இழப்பின்றி இலக்கை அடித்த பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்தது. 
 

click me!