PAK vs ENG 2வது டி20: பழிதீர்க்குமா பாகிஸ்தான்..? டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan VFirst Published Sep 22, 2022, 8:05 PM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டியில் அபார வெற்றி பெற்று இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

சொந்த மண்ணில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை பழிதீர்க்கும் முனைப்பில் 2வது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளது. கராச்சியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - IPL: மீண்டும் பழைய முறைக்கு திரும்பும் ஐபிஎல்..! கன்ஃபாம் பண்ண கங்குலி.. உற்சாகத்தில் ஐபிஎல் அணிகள்

இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி ஸ்பின் பவுலிங்கை வலுப்படுத்தும் நோக்கில் ரிச்சர்ட் க்ளீசனை நீக்கிவிட்டு லியாம் டாவ்சனை சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி நசீம் ஷாவுக்கு பதிலாக முகமது ஹஸ்னைனை சேர்த்துள்ளது.

இங்கிலாந்து அணி:

ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், பென் டக்கெட், ஹாரி ப்ரூக், மொயின் அலி (கேப்டன்), சாம் கரன், டேவிட் வில்லி, லூக் உட், லியாம் டாவ்சன், அடில் ரஷீத்.

இதையும் படிங்க - இந்திய அணி இவரை ஏன் டீம்ல வச்சுருக்காங்கனே தெரியல - மேத்யூ ஹைடன்

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஹைதர் அலி, ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், உஸ்மான் காதிர், ஹாரிஸ் ராஃப், முகமது ஹஸ்னைன், ஷாநவாஸ் தஹானி.
 

click me!