இங்கிலாந்து vs பாகிஸ்தான் முதல் டி20: பாக்., அணியின் அதிரடி முடிவு

Published : Aug 28, 2020, 10:36 PM IST
இங்கிலாந்து vs பாகிஸ்தான் முதல் டி20: பாக்., அணியின் அதிரடி முடிவு

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.   

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி மான்செஸ்டரில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்த போட்டியில் களமிறங்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய 2 அணிகளுமே வலுவாக உள்ளன. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வழக்கம்போலவே அதிரடி படையாக உள்ளது. பாகிஸ்தான் அணி இளமையும் அனுபவமும் கலந்த நல்ல கலவையிலான அணியாக உள்ளது. 

இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), டாம் பாண்ட்டன், டேவிட் மாலன், இயன் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ், மொயின் அலி, டாம் கரன், லூயிஸ் கிரெகோரி, கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், சாகில் மஹ்மூத்.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், இமாத் வாசிம், முகமது அமீர், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி.
 

PREV
click me!

Recommended Stories

IPL Auction 2026: சிஎஸ்கே வாங்கிய வீரர்கள் யார்? யார்? CSK அணி வீரர்கள் முழு பட்டியல் இதோ!
IPL Auction 2026: விலை போன வீரர்கள் யார்? யார்? விலை போகாத வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!