சொந்த காரை அடித்து உடைத்த அதிரடி வீரர்..!

Published : Aug 28, 2020, 09:10 PM IST
சொந்த காரை அடித்து உடைத்த அதிரடி வீரர்..!

சுருக்கம்

அயர்லாந்து அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரயன், அடித்த ஷாட், அவரது சொந்த காரையே பதம்பார்த்தது.  

அயர்லாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரயன். 2006ம் ஆண்டு அயர்லாந்து அணியில் அறிமுகமான கெவின் ஓ பிரயன், இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவருகிறார் கெவின் ஓ பிரயன். அயர்லாந்து அணிக்காக 3 டெஸ்ட், 148 ஒருநாள் மற்றும் 96 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

2011ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 50 பந்தில் சதமடித்து மிரட்டியவர் கெவின் ஓ பிரயன். அதுமாதிரியான இன்னும் சில அதிரடி இன்னிங்ஸ்களை அயர்லாந்து அணிக்காக ஆடியுள்ளார் அவர். 

இந்நிலையில், அயர்லாந்தில் நடந்த உள்நாட்டு போட்டியில் நார்த்வெஸ்ட் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கெவின் ஓ பிரயன் 8 சிக்ஸர்களுடன் 37 பந்தில் 82 ரன்களை விளாசினார். இந்த 8 சிக்ஸரில் ஒரு சிக்ஸர், ஸ்டேடியத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது சொந்த காரையே பதம்பார்த்தது. கெவின் ஓ பிரயன் அடித்த ஷாட், அவரது காரை தாக்கியதில் கார் சேதமடைந்தது. அதை அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

T20 உலகக்கோப்பையை எந்த டிவியில் பார்க்கலாம்? இந்திய போட்டிகள் தொடங்கும் நேரம்? முழு விவரம் இதோ!
டி20 உலகக் கோப்பை 2026: 40+ வயதிலும் கலக்கப்போகும் 5 வீரர்கள்!