ஐபிஎல் 2020: ஆடும் லெவனில் இந்த 4 வெளிநாட்டு வீரர்களையும் இறக்குங்க..! ஆர்சிபி அணிக்கு கிடைத்த தரமான யோசனை

By karthikeyan VFirst Published Aug 28, 2020, 5:20 PM IST
Highlights

ஆர்சிபி அணியின் ஆடும் லெவனில் ஆடவேண்டிய வெளிநாட்டு வீரர்கள் காம்பினேஷனை ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். 
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் செப்டம்பர் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் அங்கு சென்றுள்ளன. புதிய ஸ்பான்சர்(ட்ரீம்11), பார்வையாளர்களே இல்லாத ஸ்டேடியம் என இந்த ஐபிஎல் புது அனுபவமாக அமையவிருக்கிறது. 

மாறாத ஒரே விஷயம் என்றால், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் முதல் முறையாக கோப்பையை வெல்ல நினைப்பது மட்டுமே.. ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் இந்த 3அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பிலேயே இறங்குகின்றன. ஆனால் அதுமட்டும் இதுவரை நடக்கவில்லை. அது ஒன்றுதான் மாறாத விஷயமாக உள்ளது.

அந்தவகையில், இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தான் இந்த அணிகள் களம் காண்கின்றன. விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய உலகின் தலைசிறந்த 2 வீரர்களை ஒருங்கே பெற்றிருந்தும், ஆர்சிபி அணி இதுவரை கோப்பையை வெல்லாதது ஆச்சரியம் தான். அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, அந்த அணியின் அணி காம்பினேஷன் சரியில்லாததுதான். கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய இருவரை மட்டுமே அதிகமாக சார்ந்திருக்கிறது அந்த அணி. அதுமட்டுல்லாமல் கோர் டீம் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் ஆகிய இரண்டும் அந்த அணியில் எப்போதுமே வலுவானதாக இருந்ததில்லை.

இந்நிலையில், இந்த சீசனில் அந்த அணியில் ஆடும் லெவனில் எந்த 4 வெளிநாட்டு வீரர்களை களமிறக்கினால் அணி காம்பினேஷன் சிறப்பானதாகவும் வலுவானதாகவும் இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

டிவில்லியர்ஸ், ஆரோன் ஃபின்ச், மொயின் அலி மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்களையும் அணியில் எடுக்க வேண்டும் என்று ஆகோஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஆகாஷ் சோப்ரா, ஆரோன் ஃபின்ச்சை தொடக்க வீரராக இறக்கலாம். டிவில்லியர்ஸ் கண்டிப்பாக அணியில் இருப்பார். மொயின் அலி மற்றும் கிறிஸ் மோரிஸ் ஆகியோரையும் எடுக்கலாம். ஆர்சிபி அணியின் ஆடும் லெவனில் ஆட வேண்டிய வெளிநாட்டு வீரர்கள் காம்பினேஷனில் எனது தேர்வு இவர்கள் தான். ஃபாஸ்ட் பவுலிங்கை பொறுத்தமட்டில் உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் என போதுமான அளவிற்கு இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் உள்ளதால், வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலரை ஆடும் லெவனில் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), டிவில்லியர்ஸ்(பேட்ஸ்மேன்), தேவ்தத் படிக்கல்(பேட்ஸ்மேன்), குர்கீரத் சிங்(பேட்ஸ்மேன்), மொயின் அலி(ஆல்ரவுண்டர்), முகமது சிராஜ்(ஃபாஸ்ட் பவுலர்), நவ்தீப் சைனி(ஃபாஸ்ட் பவுலர்), பார்த்திவ் படேல்(விக்கெட் கீப்பர்), பவன் நேகி(ஆல்ரவுண்டர்), ஷிவம் துபே(ஆல்ரவுண்டர்), உமேஷ் யாதவ்(ஃபாஸ்ட் பவுலர்), வாஷிங்டன் சுந்தர்(ஆல்ரவுண்டர்), சாஹல்(ஸ்பின்னர்), கிறிஸ் மோரிஸ்(தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர்), ஆரோன் ஃபின்ச்(ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன்), கேன் ரிச்சர்ட்ஸன்(ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்), டேல் ஸ்டெய்ன்(தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர்), இசுரு உடானா(இலங்கை ஆல்ரவுண்டர்), ஷேபாஸ் அகமது(விக்கெட் கீப்பர்), ஜோஷுவா ஃபிலிப்(ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர்), பவன் தேஷ்பாண்டே(ஆல்ரவுண்டர்).
 

click me!