PAK vs WI 2வது டி20: வாழ்வா சாவா போட்டியில் டாஸ் தோற்ற வெஸ்ட் இண்டீஸ்..!

Published : Dec 14, 2021, 06:55 PM IST
PAK vs WI 2வது டி20: வாழ்வா சாவா போட்டியில் டாஸ் தோற்ற வெஸ்ட் இண்டீஸ்..!

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும்  3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடக்கிறது. கராச்சியில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் 2வது டி20 போட்டியும் இன்று கராச்சியில் தான் நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்கியுள்ளன.

இந்த போட்டியில் தோற்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை இழந்துவிடும். ஆனால் வாழ்வா சாவா என வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் கூட அந்த அணிக்கு சாதகமாக இல்லை. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், ஹைதர் அலி, ஆசிஃப் அலி, இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஹாரிஸ் ராஃப், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அஃப்ரிடி.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஷாய் ஹோப், பிரண்டன் கிங், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷமர் ப்ரூக்ஸ், ரோவ்மன் பவல், ஒடீன் ஸ்மித், ரொமாரியோ ஷெஃபெர்டு, டோமினிக் ட்ரேக்ஸ், ஹைடன் வால்ஷ், அகீல் ஹுசைன், ஒஷேன் தாமஸ்.
 

PREV
click me!

Recommended Stories

Women T20 World Cup: கடைசி நேர த்ரில்.. கையை விட்டுப்போன போட்டியை தலைகீழாக மாற்றிய நியூசிலாந்து!
Shreyanka Patil: மகளிர் டி20 உலகக்கோப்பை.. மேட்ச் வின்னர் காயத்தால் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு!