T20 World Cup: அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம்! உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published Nov 7, 2022, 6:35 PM IST

டி20 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்கும் பாகிஸ்தான் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. க்ரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் 2லிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

க்ரூப் 2ல் தென்னாப்பிரிக்க அணி கடைசி போட்டியில் நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து 5 புள்ளிகளுடன் சூப்பர் 12 சுற்றை முடித்ததால் பாகிஸ்தான் ரூட் கிளியர் ஆனது. அந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தி வங்கதேசத்தை வீழ்த்தி 6 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் அணி.

Tap to resize

Latest Videos

undefined

க்ரூப் 2ல் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணி, அரையிறுதியில் க்ரூப் 1ல் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. வரும் 9ம் தேதி அடிலெய்டில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

டி20 உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான்.. இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்தை எச்சரிக்கும் மேத்யூ ஹைடன்

இந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் இதுவரை மிகச்சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஆனாலும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வரும் 9ம் தேதி சிட்னியில் நடக்கும் அரையிறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான வலுவான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பெரும் பிரச்னையாக இருந்துவந்த நிலையில், பாகிஸ்தான் அணி பெரிதும் நம்பியிருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகியோரும் சோபிக்காததால் தான் பாகிஸ்தான் அணி சுமாராக ஆடியது. ஃபகர் ஜமானுக்கு மாற்று வீரராக அணிக்குள் வந்த முகமது ஹாரிஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அணிக்கு வலுசேர்த்துள்ளார். ஷான் மசூத், ஷதாப் கான், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ் ஆகியோரும் நன்றாக ஆடுவதால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வலுப்பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியின் பவுலிங்கை பொறுத்தமட்டில் எந்த பிரச்னையும் இல்லை. ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், முகமது வாசிம் ஆகிய நால்வரும் தங்களது வேகத்தில் எதிரணிகளை மிரட்டுகின்றனர். ஸ்பின் பவுலிங்கில் ஷதாப் கான், முகமது நவாஸுடன் தேவைப்படும்போது இஃப்டிகாரும் சிறப்பாக செயல்படுகிறார். 

பேட்டிங் தான் அந்த அணியின் பெரிய பிரச்னையாக இருந்துவந்த நிலையில், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், ஷான் மசூத் ஆகியோர் நம்பிக்கையளிப்பதால் பாகிஸ்தான் அணி உற்சாகமும் உத்வேகமும் அடைந்துள்ளது.

சிட்னியில் வரும் 9ம் தேதி கேன் வில்லியம்சன் தலைமையிலான வலுவான நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்த போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பேட்டிங்  ஆர்டரில் மாற்றம் செய்யப்படும். ஆடும் லெவன் காம்பினேஷனில் மாற்றம் செய்யப்படாது. ஆனால் பேட்டிங் ஆர்டரில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.

ஃபார்மில் இல்லாத பாபர் அசாம் ஆரம்பத்திலேயே ஆட்டமிழப்பது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைகிறது. அதற்கு பதிலாக ரிஸ்வானுடன் முகமது ஹாரிஸ் தொடக்க வீரராக இறக்கப்படலாம். கடைசி 2 போட்டிகளில் அதிரடியாக பேட்டிங் ஆடிய முகமது ஹாரிஸ் தொடக்க வீரராக இறக்கப்படுவதன் மூலம், பாபர் அசாம் வீணடிக்கும் பந்துகள் வீணாகாமலும் இருக்கும். தொடக்கம் முதலே அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை ஹாரிஸ் அமைத்து கொடுக்கும்பட்சத்தில் அது பாகிஸ்தான் அணி பெரிய ஸ்கோரை அடிக்கவும் உதவும்.

3ம் வரிசையில் ஷான் மசூத்தே ஆடலாம். பாபர் அசாம் ஆட்டத்தின்  சூழலுக்கு ஏற்ப பேட்டிங் ஆர்டரில் இறங்கலாம். இஃப்டிகார் அகமது மற்றும் ஷதாப் கானும் நல்ல ஃபார்மில் உள்ளனர். 

டி20 உலக கோப்பை: ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..! அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து பலப்பரீட்சை

உத்தேச பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.
 

click me!