#PSL தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய அணிகள், போட்டிகள் விவரம்..!

Published : Jun 20, 2021, 10:19 PM IST
#PSL தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய அணிகள், போட்டிகள் விவரம்..!

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய அணிகள் மற்றும் போட்டிகள் விவரத்தை பார்ப்போம்.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் பாதி லீக் போட்டிகள் மார்ச் மாதம் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள போட்டிகள் கடந்த சில தினங்களாக நடந்துவருகின்றன.

லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களில் இருந்த அணிகள் தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதன்படி, குவாலிஃபையரில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும்.

முதல் எலிமினேட்டரில் பெஷாவர் ஸால்மி மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. குவாலிஃபயர் மற்றும் முதல் எலிமினேட்டர் ஆகிய 2 போட்டிகளுமே 21ம் தேதி(திங்கட்கிழமை) நடக்கின்றன. 2வது எலிமினேட்டர் போட்டியில், குவாலிஃபயரில் தோற்ற அணியும், முதல் எலிமினேட்டரில் வென்ற அணியும் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
 

PREV
click me!

Recommended Stories

ஹர்திக் மரண அடி.. பும்ரா மேஜிக் பவுலிங்.. SA-வை கதறவிட்ட இந்தியா.. T20 தொடரை வென்று அசத்தல்!
அபிஷேக் சர்மா சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய ஹர்திக் பாண்ட்யா..! மின்னல் வேக அரை சதம்!