டி20 உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு எளிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்..!

By karthikeyan VFirst Published Nov 13, 2022, 3:29 PM IST
Highlights

டி20 உலக கோப்பை ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியை 20 ஓவரில் 137 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து அணிக்கு கோப்பைய வெல்ல, வெறும் 138 ரன்கள் மட்டுமே தேவை.
 

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்பர்னில் நடந்துவருகிறது. பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அரையிறுதியில் ஆடிய அதே ஆடும் லெவனுடன் தான் இரு அணிகளும் களமிறங்கின.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.

டி20 உலக கோப்பை: இந்திய அணியை கிண்டலடித்த பாகிஸ்தான் பிரதமருக்கு இர்ஃபான் பதான் தக்க பதிலடி

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத். 

முதலில் பேட்டிங்  ஆடிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை தொடக்கம் முதலே கட்டுப்பாட்டில் வைத்தனர் இங்கிலாந்து பவுலர்கள். தொடக்க வீரர் முகமது ரிஸ்வானை 15 ரன்களுக்கு சாம் கரன் வீழ்த்தினார். கடந்த சில போட்டிகளாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த முகமது ஹாரிஸை வெறும் 8 ரன்னுக்கு வெளியேற்றிய அடில் ரஷீத், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை 32 ரன்களுக்கு வீழ்த்தினார்.

இஃப்டிகார் அகமது ரன் அடிக்காமல் டக் அவுட்டானார். ஷான் மசூத் மட்டும் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி நம்பிக்கையளித்தார். 28 பந்தில் 38 ரன்கள் அடித்த ஷான் மசூத்தை அதன்பின்னர் நீடிக்கவிடாமல் சாம் கரன் அவுட்டாக்கி அனுப்பினார். ஷதாப் கான் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களை சாம் கரனும் கிறிஸ் ஜோர்டானும் இணைந்து அருமையாக வீசி, 4 ஓவரில் 20 ரன்களுக்கும் குறைவாக கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்த, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது.

IPL 2023: ஏலத்துக்கு முன் முதல் டிரேடிங்.. ஆர்சிபியிடமிருந்து ஆஸி., ஃபாஸ்ட் பவுலரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

இங்கிலாந்து அணி 138 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது. இது மிக எளிய இலக்கு என்பதால் இங்கிலாந்து அணி கோப்பையை ஜெயித்துவிடும்.
 

click me!