டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.
பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான இறுதிப்போட்டி இன்று மெல்பர்னில் நடக்கிறது. இந்த டி20 உலக கோப்பை சம்பவங்கள் அனைத்தும், 1992 ஒருநாள் உ லக கோப்பையை போன்றே இருக்கின்றன. அதேமாதிரி, லீக் சுற்றில் இந்தியாவிடம் தோற்று, கடைசி 3 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய பாகிஸ்தான், அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஃபைனலில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. அந்த உலக கோப்பை ஃபைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் உலக கோப்பையை வென்றது. இன்று என்ன நடக்கிறது, கோப்பையை எந்த அணி வெல்கிறது என்று பார்ப்போம்.
undefined
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அரையிறுதியில் ஆடிய அதே காம்பினேஷனுடன் தான் களமிறங்கியுள்ளன.
பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.
முதலில் இந்த சீனியர் வீரர்களை தூக்கி போடுங்க.. அப்பதான் டீம் விளங்கும்..! சேவாக் அதிரடி
இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத்.