IPL 2023: ஏலத்துக்கு முன் முதல் டிரேடிங்.. ஆர்சிபியிடமிருந்து ஆஸி., ஃபாஸ்ட் பவுலரை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலத்துக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்சிபியிடமிருந்து ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் ஜேசன் பெஹ்ரண்டார்ஃபை வாங்கியுள்ளது.
 

mumbai indians buys jason behrendorff from rcb ahead of ipl 2023 mini auction

ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடக்கவுள்ளது. கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடந்ததால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கிறது.

அதற்கு முன்பாக ஏலத்தில் இடம்பெறும் வீரர்கள் அடங்கிய பட்டியலை கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எனவே வரும் 15ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் விடுவிக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Latest Videos

T20 WC: தொடர் நாயகன் விருதை அந்த இந்திய வீரருக்கு கொடுங்க! விருதுக்கான ரேஸில் இருக்கும் பட்லரின் பெருந்தன்மை

அதற்கு முன்பாக மற்ற அணிகளிடமிருக்கும் தங்களுக்கு தேவையான வீரர்களை அணிகள் டிரேடிங் செய்துகொள்ளலாம். அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்சிபி அணியிடமிருந்து ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் ஜேசன் பெஹ்ரண்டார்ஃபை வாங்கியுள்ளது.

முதலில் இந்த சீனியர் வீரர்களை தூக்கி போடுங்க.. அப்பதான் டீம் விளங்கும்..! சேவாக் அதிரடி

ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் ஐபிஎல் 2018ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே ஆடியவர். 2021 ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில் இருந்தவரை, ஐபிஎல் 2022-க்கான மெகா ஏலத்தில் ரூ.75 லட்சத்துக்கு ஆர்சிபி அணி எடுத்தது. இந்நிலையில், தங்கள் அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் விதமாக அவரை ஆர்சிபியிடமிருந்து வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கைரன் பொல்லார்டு, சூர்யகுமார் யாதவ், பும்ரா, இஷான் கிஷன், ராமன் தீப் சிங், ராகுல் புத்தி, ரித்திக் ஷோகீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஆரியன் ஜுயால், ஃபேபியன் ஆலன், டிவால்ட் பிரெவிஸ், பாசில் தம்பி, முருகன் அஷ்வின், ஜெய்தேவ் உனாத்கத், மயன்க் மார்கண்டே, திலக் வர்மா, சஞ்சய் யாதவ், ரைலீ மெரிடித், முகமது அர்ஷாத் கான், அன்மோல்ப்ரீத் சிங்.
 

vuukle one pixel image
click me!
vuukle one pixel image