முதலில் இந்த சீனியர் வீரர்களை தூக்கி போடுங்க.. அப்பதான் டீம் விளங்கும்..! சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 12, 2022, 7:46 PM IST
Highlights

இந்திய அணியின் மூத்த வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைத்தால் தான் அடுத்த டி20 உலக கோப்பையில் வலுவான அணியாக களமிறங்க முடியும் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கபட்ட இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்த டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

பும்ரா, ஜடேஜா ஆகிய 2 முக்கியமான பெரிய வீரர்கள் காயத்தால் ஆடாதபோதிலும், அதெல்லாம் அணியின் வெற்றியை பாதிக்காதவகையில், சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

இந்திய அணியில் வீரர்களின் ரோல் என்னவென்பதே தெளிவாக இல்லை.. பிறகு எப்படி ஜெயிக்கிறது..? அனில் கும்ப்ளே விளாசல்

அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ராகுல்(5), ரோஹித்(28 பந்தில் 27 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (14) ஆகிய மூவரும் ஏமாற்றமளித்தனர். விராட் கோலி (40 பந்தில் 50 ரன்கள்) மற்றும் சூர்யகுமார் யாதவின் (33 பந்தில் 63 ரன்கள்) அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 168 ரன்கள் அடித்தது இந்திய அணி. 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லரும் அலெக்ஸ் ஹேல்ஸுமே அடித்துவிட்டனர். அந்த அணியின் ஒரு விக்கெட்டைக்கூட வீழ்த்த முடியாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய அணி தோற்ற விதம் தான் கவலையளித்தது.

இந்திய பவுலர்கள் சரியாக பந்துவீசவில்லை என்பதை போட்டிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா வருத்தத்துடனும் அதிருப்தியுடனும் தெரிவித்தார். வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம். ஆனால் இந்திய அணி தோற்ற விதம் மிக மோசமானது. ஆனால் பவுலிங்கை மட்டும் குறைகூற முடியாது. பேட்டிங்கில் இன்னும் 15-20 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும் என்பதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சுட்டிக்காட்டினார்.  

டி20 உலக கோப்பை: ஃபைனலில் களமிறங்கும் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

இந்த தோல்விக்கு இந்திய அணி தேர்வு செய்த ஆடும் லெவன் காம்பினேஷனும் ஒரு காரணம் எனலாம். அனைத்து அணிகளிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் நன்றாக செயல்பட்டபோதிலும், சாஹலுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அஷ்வினும் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறினார். ஆனாலும் கூட, சாஹலுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இன்றைய அரையிறுதி போட்டியிலும் அஷ்வின் 2 ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கினார். அக்ஸர் படேலும் 4 ஓவரில் 30 ரன்களை வழங்கினார். புவனேஷ்வர் குமார், ஷமி ஆகிய சீனியர் ஃபாஸ்ட் பவுலர்களும் பயங்கரமாக அடி வாங்கினர்.

இந்திய அணியின் இந்த படுதோல்வி, உண்மையாகவே அணியின் வலிமை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர் என இளம் திறமையான அதிரடி வீரர்கள் வரிசைகட்டி நிற்பதால் இந்திய அணியின் சீனியர் வீரர்களை டி20 கிரிக்கெட்டில் ஓரங்கட்டிவிட்டு முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்ட அணியை ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் கட்டமைக்கலாம் என்ற கருத்துவலுக்கிறது.

அந்தவகையில், அதே கருத்தைத்தான் சேவாக்கும் கூறியுள்ளார். இந்த உலக கோப்பையில் சரியாக ஆடாத சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைக்க வேண்டும் என்று  சேவாக் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்கணும்! அனில் கும்ப்ளே, ஸ்டீஃபன் ஃப்ளெமிங் அறிவுரை

இதுகுறித்து பேசிய வீரேந்திர சேவாக், அடுத்த டி20 உலக கோப்பை தொடரில் சில வீரர்களை நான் பார்க்க விரும்பவில்லை. 2007 டி20 உலக கோப்பையில் மூத்த வீரர்கள் யாரும் இல்லாமல் இளம் வீரர்கள் மட்டுமே கலந்துகொண்டு ஆடினர். அதனால் அவர்கள் கண்டிப்பாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. அந்த அழுத்தம் அணி மீது இல்லை. இளம் வீரர்களை கொண்ட அணி சிறப்பாக ஆடி உலக கோப்பையை வென்றது. அதேபோன்றதொரு இளம் அணியை அடுத்த டி20 உலக கோப்பைக்கு பார்க்க விரும்புகிறேன். அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அதற்கேற்ப இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைக்க வேண்டும். மீண்டும் அடுத்த உலக கோப்பையிலும் இதே வீரர்கள் தான் ஆடுவார்கள் என்றால் இதே முடிவுதான் கிடைக்கும் என்று சேவாக் விளாசினார்.
 

click me!