இந்திய அணியில் வீரர்களின் ரோல் என்னவென்பதே தெளிவாக இல்லை.. பிறகு எப்படி ஜெயிக்கிறது..? அனில் கும்ப்ளே விளாசல்

By karthikeyan VFirst Published Nov 12, 2022, 5:34 PM IST
Highlights

இந்திய அணி வலுவானதாகவும், நல்ல பேலன்ஸான அணியாகவும் திகழ வேண்டுமென்றால், ஒவ்வொரு வீரரின் ரோலையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று அனில் கும்ப்ளே அறிவுறுத்தியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. அந்த இலக்கை ஜோஸ் பட்லரும் அலெக்ஸ் ஹேல்ஸும் இணைந்தே அடித்துவிட்டனர். இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட இந்திய அணியால் வீழ்த்த முடியாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்திய அணி.

டி20 உலக கோப்பை: ஃபைனலில் களமிறங்கும் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த விதம் தான் வருத்தத்திற்குரியது. இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா ஆடாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாது, இந்திய அணி ஆடும் லெவன் காம்பினேஷனில் தெளிவே இல்லாமல் குழப்பத்துடன் ஆடியது. முதல் 4 சூப்பர் 12 சுற்று போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கை ஆடவைத்தது. அதன்பின்னர் கடைசி சூப்பர் 12 சுற்று போட்டி மற்றும் அரையிறுதியில் ரிஷப் பண்ட்டை ஆடவைத்தது. ரிஷப் பண்ட் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் கிடையாது. அந்த ரோலை அவர் செய்ததும் கிடையாது. ஆனால் அரையிறுதியில் அவர் கடைசி ஒன்றிரண்டு ஓவர்களில் ஆட நேரிட்டது. அதை அவரால் சரியாக செய்யமுடியவில்லை.

அதேபோல, ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலை ஆடவைக்கவேயில்லை. மிடில் ஓவர்களில் அஷ்வின் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியபோதிலும், கடைசி வரை சாஹலுக்கு ஆட வாய்ப்பு வழங்கப்படவில்லை. திடீரென ஒரு போட்டியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக தீபக் ஹூடாவை ஆடவைத்தார்கள். இப்படியாக அணியின் ஆடும் லெவனில் ஒரு திடமான முடிவில்லாமல் குழப்பத்துடன் இருந்தது இந்திய அணி.

இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்கணும்! அனில் கும்ப்ளே, ஸ்டீஃபன் ஃப்ளெமிங் அறிவுரை

அதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளார் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே. இதுகுறித்து பேசிய அனில் கும்ப்ளே, இந்திய அணியின் பேலன்ஸ் வலுவாக இருக்க வேண்டுமென்றால் பேட்ஸ்மேன்களும் பந்துவீச வேண்டியது அவசியம். இந்தியா ஏ அணியில் கூட பேட்ஸ்மேன்கள் பந்துவீசுவதில்லை. பேட்ஸ்மேன்கள் பந்துவீசுவதுதான் அணியின் பேலன்ஸை வலுப்படுத்தும். எனவே பேட்ஸ்மேன்களை பந்துவீச தயார்படுத்த வேண்டும். மேலும் வீரர்களின் ரோலை தெளிவுபடுத்த வேண்டும்.  அரையிறுதியில் திடீரென 19வது ஓவரில் ரிஷப் பண்ட் களமிறங்க நேரிட்டது. அவர் அந்த ரோலை அதற்கு முன் செய்ததில்லை. எனவே ஒவ்வொரு வீரரின் ரோலையும் தெளிவுபடுத்தி, பேட்ஸ்மேன்களும் பந்துவீசினால் தான் இந்திய அணி வலுவான அணியாக திகழமுடியும் என்று அனில் கும்ப்ளே கருத்து கூறியுள்ளார்.
 

click me!