இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்கணும்! அனில் கும்ப்ளே, ஸ்டீஃபன் ஃப்ளெமிங் அறிவுரை

By karthikeyan VFirst Published Nov 12, 2022, 4:16 PM IST
Highlights

இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான்களான அனில் கும்ப்ளே மற்றும் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ஆகிய இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.
 

டி20 உலக கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறியது. இந்திய அணி நிர்ணயித்த 169 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவருமே அடித்து முடித்துவிட்டனர்.

அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக ஆடி 47 பந்தில் 86 ரன்களை குவித்தார். அவர் பிக்பேஷ் லீக்கில் ஆடியதால் அடிலெய்ட் ஆடுகளத்தை பற்றி அவர் நன்கு அறிந்ததால் தான் அவரால் சிறப்பாக ஆடமுடிந்தது. மற்ற அணி வீரர்கள் எல்லாம் அனைத்து நாட்டு டி20 லீக் தொடர்களிலும் ஆடுகின்றனர். ஆனால் இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதுக்கு 9 வீரர்களை பட்டியலிட்ட ஐசிசி..! ரசிகர்களே தேர்வு செய்யலாம்

டி20 உலக கோப்பை படுதோல்விக்கு பின் இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று அனில் கும்ப்ளே, ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ஆகிய முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய அனில் கும்ப்ளே, பலதரப்பட்ட இடங்களில் ஆடுகளங்களில் ஆடுவது கண்டிப்பாகவே எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் உதவும். ஐபிஎல்லில் வெளிநாட்டு வீரர்கள் ஆடுவதே இந்திய கிரிக்கெட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல, இந்திய வீரர்களை அங்கு சென்று ஆட அனுமதிக்கலாம். முக்கியமான இளம் வீரர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அவர்களைவெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்கலாம். அது ரொம்ப முக்கியமானது என நினைக்கிறேன். எனவே 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.

இந்திய டி20 அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்கு பதிலா அவரை நியமிக்கணும்! ஹர்பஜன் சிங் அதிரடி

இதுகுறித்து பேசிய ஸ்டீஃபன் ஃப்ளெமிங், அலெக்ஸ் ஹேல்ஸுக்கு பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஆடுகளத்தில் ஆடிய அனுபவம் அரையிறுதி போட்டியில் பெரியளவில் உதவியது. வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆடுவது வீரர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். அடுத்த டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடக்கிறது. எனவே கரீபியன் பிரீமியர் லீக் தொடர் முக்கிய அங்கம் வகிக்கும். கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடுவது அந்த கண்டிஷனையும், ஆடுகளத்தின் தன்மையையும் புரிந்துகொள்ள உதவும். அது பெரிய பலமாக அமையும். எனவே கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆடும் வீரர்களுக்கு பெரிய பலமாக அமையும் என்று ஸ்டீஃபன் ஃப்ளெமிங் கருத்து கூறியுள்ளார்.
 

click me!