டி20 உலக கோப்பை ஃபைனலில் களமிறங்கும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் ஃபைனலுக்கு முன்னேறின.
நாளை(வரும் 13) மெல்பர்னில் நடக்கும் ஃபைனலில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
undefined
இரு அணிகளுமே அரையிறுதியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளின் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமில்லை. இங்கிலாந்து அணியில் காயத்தால் டேவிட் மலானும், மார்க் உட்டும் அரையிறுதியில் ஆடாததால் அவர்களுக்கு பதிலாக ஃபிலிப் சால்ட்டும், கிறிஸ் ஜோர்டானும் ஆடினர். அவர்களே ஃபைனலிலும் ஆடுவார்கள்.
எனவே இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது. அரையிறுதியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.
உத்தேச பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, முகமது நவாஸ், ஷதாப் கான், முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.
டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதுக்கு 9 வீரர்களை பட்டியலிட்ட ஐசிசி..! ரசிகர்களே தேர்வு செய்யலாம்
உத்தேச இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி ப்ரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத்.