பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்பதை காட்டும்வகையில், ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடிவருகின்றனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இன்று துபாயில் நடந்துவரும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையும் படிங்க - IND vs PAK: அவரை ஆடும் லெவனில் எடுத்தது பெரிய சர்ப்ரைஸ் தான்..! ஆனால் நீடிக்கமாட்டார்.. கௌதம் கம்பீர் அதிரடி
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்.
பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட்கீப்பர்), ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், ஷாநவாஸ் தஹானி.
முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி மோசமாக ஆடியது. அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான் ஆகிய மூவருமே சோபிக்காததால் 15வது ஓவரில் தான் பாகிஸ்தான் அணி 100 ரன்களையேஎட்டியது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடிவருகின்றனர். பாகிஸ்தானில் பெய்த கடும் மழையால் அந்நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் பெய்த கடும் மழையால் 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர். 900க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 4 லட்சம் வீடுகள் பாழடைந்தன. சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க - Asia Cup: பத்தே ஓவரில் இலக்கை அடித்து ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி..! இலங்கை படுதோல்வி
எனவே அவர்களுக்கு துணை நிற்பதை தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர்.