இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 4 சுற்று போட்டியின் போது முகத்தில் காயமடைந்த பாகிஸ்தான் வீரர் அகா சல்மான் இலங்கைக்கு எதிராக நாளை நடக்க உள்ள போட்டியில் இடம் பெறமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று போட்டியின் 4ஆவது போட்டி ரிசர்வ் டேயால் கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 50 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து 356 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக விராட் கோலி 122* ரன்களும், கேஎல் ராகுல் 111* ரன்களும் எடுத்தனர். மேலும் ரோகித் சர்மா 56 ரன்களும், சுப்மன் கில் 58 ரன்களும் எடுத்தனர்.
இதெல்லாம் நடந்தால் இந்தியா தான் நம்பர் 1 டீம்; ஆஸி., பாக்., எல்லாம் இனி இந்தியாவுக்கு அப்புறம் தான்!
இதையடுத்து கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹாக் 9 ரன்னிலும், கேப்டன் பாபர் அசாம் 10 ரன்னிலும், முகமது ரிஸ்வான் 2 ரன்னிலும், ஃபஹர் ஜமான் 27 ரன்னிலும், இப்திகார் அகமது 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஐந்தாவதாக களமிறங்கிய அகா சல்மான் நிதானமாக விளையாடி வந்த நிலையில், ஹெல்மெட் அணியாத நிலையில் ஒரு கட்டத்தில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஸ்வீப் அடிக்க முயற்சித்து முகத்தின் வலது கண்ணிற்கு கீழ் பலத்த காயமடைந்த நிலையில், ரத்தம் வழிந்தது. இதையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
SL vs PAK: பாகிஸ்தானா? இலங்கையா? இறுதிப் போட்டி யாருக்கு?
அதன் பிறகு சிறிது நேரத்திலேயே அவர் 23 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இந்த நிலையில், இந்த போட்டி முடிந்த பிறகு கொழும்புவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அகா சல்மான் சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வலி ஏதும் இல்லையென்றாலும் கூட முகம் வீக்கமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக நாளை நடக்க உள்ள இலங்கைக்கு எதிரான போட்டியில் அவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று நசீம் ஷா மற்றும் ஹரிஷ் ராஃப் ஆகியோரும் இடம் பெறமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
IND vs SL: அனில் கும்ப்ளே, அஜித் அகர்கர் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!