PAK vs NZ: ODI தொடருக்கான பாக்.,அணி அறிவிப்பு..! ஒதுக்கப்பட்ட வீரர்களை அணிக்குள் கொண்டுவந்து அஃப்ரிடி அதகளம்

By karthikeyan V  |  First Published Jan 5, 2023, 5:42 PM IST

PAK vs NZ: ஒருநாள் தொடருக்கான பாக்., அணி அறிவிப்பு! ஒதுக்கப்பட்ட வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்து அதகளம் செய்யும் அஃப்ரிடி 
 


நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. டெஸ்ட் தொடர் முடிந்ததும், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.

இந்த ஆண்டு இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை நடக்கவுள்ளதால், அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. உலக கோப்பையையொட்டி இந்த ஆண்டு அனைத்து அணிகளும் நிறைய ஒருநாள் போட்டிகளில் ஆடுகின்றன. வலுவான அணியை கட்டமைக்கும் பணியில் அனைத்து அணிகளும் ஈடுபட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

2023 ஒருநாள் உலக கோப்பையை எந்த அணி வெல்லும்..? சங்கக்கரா அதிரடி

ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு பிசிசிஐ 20 வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்துள்ளது. அதேபோல பாகிஸ்தான் அணியும் சில வீரர்களை ஷார்ட்லிஸ்ட் செய்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வலுப்படுத்துவதற்காக ஷாஹித் அஃப்ரிடி இடைக்கால தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியை தேர்வு செய்துள்ளது, அஃப்ரிடி தலைமையிலான தேர்வுக்குழு.

பாபர் அசாம் தலைமையிலான 16 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயமடைந்த ஃபாஸ்ட் பவுலர் ஹாரிஸ் ராஃப், காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸுடன் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடாத விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறார்.

2019ம் ஆண்டு தனது கடைசி ஒருநாள் போட்டியில் ஆடிய ஷான் மசூத், 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். அதேபோல 2020ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக ஹாரிஸ் சொஹைலும் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார்.

சஞ்சு சாம்சனுக்கு பதில் களமிறங்குவது யார்..? நீண்ட நாள் காத்திருக்கும் வீரருக்கு சான்ஸ்..! உத்தேச ஆடும் லெவன்

பாகிஸ்தான் ஒருநாள் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), ஃபகர் ஜமான், ஹாரிஸ் ராஃப், ஹாரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், காம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம், நசீம்ஷா, சல்மான் அலி அகா, ஷாநவாஸ் தஹானி, ஷான் மசூத், டயாப் தாஹிர், உஸாமா மிர்.
 

click me!