கொரோனா பீதிக்கு மத்தியில் இங்கிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்..!

By karthikeyan VFirst Published Jun 29, 2020, 4:53 PM IST
Highlights

கொரோனா பீதிக்கு மத்தியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. 
 

கொரோனா பீதிக்கு மத்தியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், ஜூலை 8ம்  தேதி, நீண்ட இடைவெளிக்கு பிறகு, முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஜூலை 8ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஆட வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸுக்கு அடுத்து, இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக நேற்று பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர். ஆகஸ்ட் மாதம் தான் இந்த தொடர் நடக்கிறது என்றாலும், பாகிஸ்தான் வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் குழுவை தனிமைப்படுத்தி பரிசோதிப்பதற்கான கால அவகாசம் தேவையென்பதால், முன்கூட்டியே சென்றுள்ளனர். 

20 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழு உட்பட 31 பேர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானது. அவர்களில், ஃபகார் ஜமான், முகமது ஹஸ்னைன், முகமது ஹஃபீஸ், முகமது ரிஸ்வான், ஷதாப் கான், வஹாப் ரியாஸ் ஆகிய 6 பேருக்கும் இரண்டாவது பரிசோதனையில், கொரோனா நெகட்டிவ் என வந்தது. அதேவேளையில், ஹைதர் அலி, ஹாரிஸ் ராஃப், காஷிஃப் பாட்டி, இம்ரான் கான் ஆகிய 4 பேருக்கும் இரண்டாவதாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலும் பாசிட்டிவ் என வந்தது. 

இரண்டாவது முறை நெகட்டிவ் வந்த வீரர்களுக்கு இன்னும் 2 முறை பரிசோதனை செய்யப்படும். அதிலும் நெகட்டிவ் என வந்தால், அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்படுவார்கள். 

இங்கிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள்:

அசார் அலி, பாபர் அசாம், அபித் அலி, ஆசாத் ஷாஃபிர், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபவாத் ஆலம் இஃப்டிகார் அகமது, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், குஷ்தில் ஷா, முகமது அப்பாஸ், மூசா கான், நசீம் ஷா, ரொஹைல் நாசீர், சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஷான் மசூத், சொஹைல் கான், உஸ்மான் ஷின்வாரி, யாசிர் ஷா.
 

click me!