கெய்ல், ரசல், ஹர்திக் பாண்டியாலாம் இல்ல.. ஆனாலும் மிகச்சிறந்த ஆல்டைம் ஐபிஎல் லெவன்..!

By karthikeyan VFirst Published Jun 29, 2020, 2:51 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடக்காததால், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும், தங்களது ஆல்டைம் ஒருநாள், டெஸ்ட், டி20 மற்றும் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துவருகின்றனர். 

அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகாஷ் சோப்ரா, தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். தனது ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னரை தேர்வு செய்துள்ளார். கிறிஸ் கெய்லை விட டேவிட் வார்னர் நிலைத்தன்மை கொண்டவர் என்பதாலும், பெரும்பாலான போட்டிகளில் ஸ்கோர் செய்துவிடுவார் என்றவகையில், கெய்லை விட வார்னரே சிறந்தவர் என்று கருதுவதால் வார்னரை தேர்வு செய்ததாக சோப்ரா தெரிவித்துள்ளார். 

மூன்றாம் வரிசையில் விராட் கோலி, நான்காம் வரிசையில் ரெய்னா, ஐந்தாம் வரிசையில் டிவில்லியர்ஸ் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ளார். தோனியையே இந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார். 

ஸ்பின்னர்களாக சுனில் நரைன் மற்றும் ஹர்பஜன் சிங்கையும் ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், மலிங்கா மற்றும் பும்ரா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். வார்னர், டிவில்லியர்ஸ், நரைன் மற்றும் மலிங்கா ஆகிய நால்வரும் ஆகாஷ் சோப்ராவின் ஆல்டைம் ஐபிஎல் லெவனில் இடம்பெற்றுள்ள நான்கு வெளிநாட்டு வீரர்கள். 

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

டேவிட் வார்னர், ரோஹித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, டிவில்லியர்ஸ், தோனி(விக்கெட் கீப்பர், கேப்டன்), சுனில் நரைன், ஹர்பஜன் சிங், புவனேஷ்வர் குமார், லசித் மலிங்கா, ஜஸ்ப்ரித் பும்ரா.

கடந்த சில சீசன்களாக அதிரடி பேட்டிங்கில் அசத்திவரும் ஆண்ட்ரே ரசல், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகிய முக்கியமான சில வீரர்களுக்கு ஆகாஷ் சோப்ராவின் அணியில் இடமில்லை. அதேபோல இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவையும் ஆகாஷ் சோப்ரா, தனது அணியில் புறக்கணித்துள்ளார். 

click me!