பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்டுள்ள முக்கியமான அப்டேட்

By karthikeyan VFirst Published Jun 29, 2020, 2:17 PM IST
Highlights

ஆகஸ்ட்டுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எந்த பயிற்சி முகாமும் ஏற்பாடு செய்யப்படமாட்டாது என பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 
 

ஆகஸ்ட்டுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எந்த பயிற்சி முகாமும் ஏற்பாடு செய்யப்படமாட்டாது என பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். 

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜூலை 8ம் தேதி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. அதன்பின்னர் பாகிஸ்தானுடன் ஆடுகிறது இங்கிலாந்து அணி. பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் ஆகஸ்ட் மாதம் நடக்கிறது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தொடங்கப்பட்டாலும், ஐபிஎல் எப்போது, இந்தியாவில் எப்போது மறுபடியும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு. 

மார்ச் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய ஐபிஎல், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் 18ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள டி20 உலக கோப்பை தள்ளிப்போக வாய்ப்புள்ளது. டி20 உலக கோப்பை தள்ளிப்போகும் பட்சத்தில், செப்டம்பர் இறுதியில் தொடங்கி நவம்பர் வரை ஐபிஎல்லை நடத்தும் திட்டத்தில் பிசிசிஐ உள்ளது. ஆனால் ஐசிசி, டி20 உலக கோப்பை குறித்து திடமான முடிவை இன்னும் அறிவிக்கவில்லை என்பதால், ஐசிசியின் அப்டேடுக்காக பிசிசிஐ காத்து கொண்டிருக்கிறது. 

இதற்கிடையே சில கிரிக்கெட் வீரர்கள் தங்களது பயிற்சியை மெல்ல மெல்ல தொடங்குகின்றனர். ஆனால் இந்திய வீரர்களுக்கென்று பிசிசிஐ தரப்பில் எந்தவிதமான பயிற்சி முகாம்களும் இதுவரை ஏற்பாடு செய்யவில்லை. ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு, எந்தவிதமான பயிற்சி முகாம்களும் இருக்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 

click me!