என் உடம்புல கொழுப்பு எங்கே இருக்குனு காட்டுங்க.. ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் திமிரு பண்ணிய பாகிஸ்தான் வீரர்

By karthikeyan VFirst Published Feb 3, 2020, 1:58 PM IST
Highlights

ஃபிட்னெஸ் டெஸ்ட்டின்போது உடற்பயிற்சி நிபுணரிடம் பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் திமிராக பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றவுடனே மிஸ்பா உல் ஹக், வீரர்களின் உடற்தகுதியில்தான் கவனம் செலுத்தினார். அதனால் உள்நாட்டு போட்டிகளில் ஆடும் வீரர்களின் ஃபிட்னெஸ் கூட, சர்வதேச அளவிற்கு தகுதியாக இருக்க வேண்டும் என்று அதற்காக விதிகளை கடுமையாக்கினார். 

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல், அந்நாட்டின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடந்த ஃபிட்னெஸ் டெஸ்ட்டின்போது, ஒரு டெஸ்ட்டில் தேறவில்லை. இதையடுத்து கடுப்பான உமர் அக்மல், பரிசோதனை செய்த உடற்தகுதி நிபுணரிடம், என் உடலில் கொழுப்பு எங்கே இருக்கிறது காட்டுங்கள் என கோபமாக கேட்டுள்ளார். 

உமர் அக்மலின் இந்த செயல் அத்துமீறிய செயல்பாடு. அவரது ஆணவமான செயல்பாடு பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் விளைவாக, அவருக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட கூட வாய்ப்பிருக்கிறது. 

Also Read - இந்திய அணிக்கு இன்னொரு தோனி கிடைச்சுட்டாரு.. முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் நனையும் இந்நாள் வீரர்

உமர் அக்மல் பாகிஸ்தான் அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகள், 121 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி20 போட்டிகளில் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!