இந்திய அணிக்கு இன்னொரு தோனி கிடைச்சுட்டாரு.. முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் நனையும் இந்நாள் வீரர்

By karthikeyan VFirst Published Feb 3, 2020, 12:59 PM IST
Highlights

தோனிக்கு நிகராக இல்லையென்றாலும், கிட்டத்தட்ட அவரது பேட்டிங் ஸ்டைலை கொண்டவர் மனீஷ் பாண்டே என்று முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா புகழாரம் சூட்டியுள்ளார். 
 

தோனி ஓய்வு அறிவிக்கவில்லையென்றாலும், அவரது கெரியர் முடிந்துவிட்டது. இந்நிலையில், டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக உருவெடுத்துள்ள நிலையில், தோனி செய்த மற்றொரு முக்கியமான ஃபினிஷிங் பணியை செய்ய இந்திய அணிக்கு ஒரு வீரர் தேவை. 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளில் மனீஷ் பாண்டே ஆடிய விதத்தை வைத்து அவர் தான் இந்திய அணியின் அடுத்த ஃபினிஷர் என்று முன்னாள் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். 

Also Read - முட்டாள்தனமா ஆடிய நியூசிலாந்து.. அவங்க ஆடுனதுக்கு பேரு கிரிக்கெட்டா..? நியூசிலாந்து அணியை கேவலமா திட்டிய முன்னாள் வீரர்

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில், 88 ரன்களுக்கே இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அந்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியவர் மனீஷ் பாண்டே. 36 பந்தில் 50 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் தான் இந்திய அணி 165 ரன்கள் என்ற ஸ்கோரை அடித்தது. 

அதேபோல கடைசி போட்டியில், ஷ்ரேயாஸ் ஐயர் பெரிய ஷாட்டுகளை ஆடமுடியாமல் திணறியதால் இந்திய அணியின் ஸ்கோர் மிகக்குறைவாக இருந்த சூழலில், கடைசி நேரத்தில் களமிறங்கி, 4 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 11 ரன்களை அடித்தார் மனீஷ் பாண்டே. 

இந்நிலையில், மனீஷ் பாண்டே குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் ஜாகீர் கான், ஆட்டத்தின் சூழலை உணர்ந்து அதற்கேற்ப அருமையாக ஆடுகிறார் மனீஷ் பாண்டே. அதுமட்டுமல்லாமல் தனது பலங்கள் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்து அதற்கேற்ப ஆடுகிறார் என்று மனீஷ் பாண்டேவை புகழ்ந்துள்ளார். 

Also Read - அவ்வளவு பரபரப்புலயும் பதற்றமே படாமல் நிதானமா, சாமர்த்தியமா செயல்பட்ட சாம்சன்.. அருமையான ரன் அவுட்.. வீடியோ

மனீஷ் பாண்டே குறித்து பேசிய அஜய் ஜடேஜா, 18வது ஓவருக்கு பின்னால் மனீஷ் பாண்டே அவுட்டாகி அரிதாகத்தான் பார்த்திருக்கிறேன். தோனி மெர்சிடெஸ்(கார்) வெர்சன் என்றால், மனீஷ் பாண்டே ஆல்ட்டோ வெர்சன். குதிரைத்திறன் வேண்டுமென்றால் தோனியைவிட குறைவாக இருக்கலாம். ஆனால் பேட்டிங் ஸ்டைல் தோனியை போன்றே தான் இருக்கிறது என்று மனீஷ் பாண்டேவை புகழ்ந்தார் அஜய் ஜடேஜா. 
 

click me!