டி20 கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் கோலி.. கேப்டன்சியில் புதிய சாதனை

Published : Feb 03, 2020, 12:17 PM IST
டி20 கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் கோலி.. கேப்டன்சியில் புதிய சாதனை

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை, அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்றதன் மூலம் கேப்டன் கோலி, அதிக டி20 தொடர்களை வென்ற கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.  

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்துவிதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து பல புதிய மைல்கற்களை எட்டிவருகிறது. 

இந்நிலையில், நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஐந்திலுமே வென்று 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து, முதன்முறையாக நியூசிலாந்து மண்ணில் டி20 தொடரை வென்றுள்ளது. 

இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக தொடர்களை வென்ற கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ள கோலி, புதிய மைல்கல்லை செட் செய்துள்ளார். 

Also Read - முட்டாள்தனமா ஆடிய நியூசிலாந்து.. அவங்க ஆடுனதுக்கு பேரு கிரிக்கெட்டா..? நியூசிலாந்து அணியை கேவலமா திட்டிய முன்னாள் வீரர்

விராட் கோலி கேப்டன்சியில் இந்திய அணி வென்ற 10வது டி20 தொடர் இது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸின் கேப்டன்சி ரெக்கார்டை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார் கோலி. 9 டி20 தொடர்களை வென்ற டுப்ளெசிஸ் இரண்டாமிடத்திலும், 7 டி20 தொடர்களை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் மூன்றாமிடத்திலும் உள்ளனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா