மரண அடிக்கு பின் மணிக்கணக்கா மீட்டிங்.. அப்படி என்னதான் பேசுனாங்க பாகிஸ்தான் டீம்

By karthikeyan VFirst Published May 20, 2019, 4:39 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துமுடிந்த ஒருநாள் தொடரில் 4 போட்டியிலும் தோற்று பாகிஸ்தான் அணி ஒயிட்வாஷ் ஆகியிருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் அசால்ட்டாக அடித்தது. பாகிஸ்தான் அணியில் பேட்டிங் சிறப்பாகவே உள்ளது. பவுலிங்கும் ஃபீல்டிங்கும்தான் மிக மோசம். 
 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு, தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். அதிலும் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால் இங்கிலாந்து அணி வெல்வதற்கான வாய்ப்புதான் சற்று அதிகமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளும் சிறப்பாக உள்ளன. ஆனாலும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக கருதப்படுகின்றன. 

சர்ஃபராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஷோயப் மாலிக், ஹஃபீஸ் போன்ற அனுபவ வீரர்கள் மற்றும் ஃபகார் ஜமான், ஷாஹீன் அஃப்ரிடி போன்ற இளம் வீரர்கள் என அனுபவ மற்றும் இளம் வீரர்களை கொண்ட நல்ல கலவையிலான அணியாக திகழ்கிறது. 

இங்கிலாந்தில் 2009ல் நடந்த டி20 உலக கோப்பை, 2017ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டு முக்கியமான தொடர்களை பாகிஸ்தான் வென்றுள்ளது. எனவே இங்கிலாந்து கண்டிஷனில் பாகிஸ்தான் நன்கு ஆடக்கூடிய அணி என்பதால் அந்த அணிக்கான வாய்ப்பும் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. 

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துமுடிந்த ஒருநாள் தொடரில் 4 போட்டியிலும் தோற்று பாகிஸ்தான் அணி ஒயிட்வாஷ் ஆகியிருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் அசால்ட்டாக அடித்தது. பாகிஸ்தான் அணியில் பேட்டிங் சிறப்பாகவே உள்ளது. பவுலிங்கும் ஃபீல்டிங்கும்தான் மிக மோசம். 

உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ் ஆகியிருப்பது அந்த அணி வீரர்களை உளவியல் ரீதியாக கடுமையாக பாதித்திருக்கும். எனினும் அந்த அணி இந்த படுதோல்வியிலிருந்து மீண்டு உலக கோப்பையில் நம்பிக்கையுடன் ஆட வேண்டியிருக்கிறது. இங்கிலாந்திடம் அடைந்த தோல்வி, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்துரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. 

நேற்று நடந்த கடைசி போட்டியில் தோற்றபிறகு, பயிற்சியாளர் மிக்கி ஆர்த்துர் வீரர்களுடன் நீண்ட நேர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஒரு அணியாக களத்தில் பாகிஸ்தான் வீரர்கள் செய்யும் தவறுகள், செய்யத்தவறும் விஷயங்கள், மேம்பட வேண்டிய ஏரியாக்கள் ஆகியவை குறித்து விவாதித்திருக்க வாய்ப்புள்ளது. என்ன மீட்டிங் போட்டு என்ன பிரயோஜனம்..? களத்தில் தவறு செய்யாமல் வீரர்கள் ஆடினால்தான் உண்டு. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் ஃபீல்டிங்கில் படுமோசமாக சொதப்புகின்றனர். 

உலக கோப்பை அணி குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கும். அதனால்தான் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியிலிருந்து 3 வீரர்கள் நீக்கப்பட்டு 3 புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டனர். அபித் அலிக்கு பதிலாக ஆசிஃப் அலியும் ஃபஹீம் அஷ்ரஃபுக்கு பதில் முகமது அமீரும் ஜுனைத் கானுக்கு பதில் வஹாப் ரியாஸும் அணியில் சேர்க்கப்பட்டனர். அணி குறித்தும் அந்த மீட்டிங்கில் விவாதிக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் தான் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. 

click me!