உலக கோப்பையை ஜெயிக்கணும்னா அவங்க 3 பேருல ஒருத்தர் இத கண்டிப்பா செய்யணும்!! சேவாக் அதிரடி

By karthikeyan VFirst Published May 20, 2019, 3:05 PM IST
Highlights

இந்த முறை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்த மற்றும் எதிரணிகளின் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஆடக்கூடிய ஆக்ரோஷமான அணியுடன் உலக கோப்பைக்கு செல்கிறது இந்திய அணி. 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் ஆக்ரோஷமாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். 

இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் சிறப்பம்சமே பவுலிங் தான். முன்னெப்போதையும் விட சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய மூவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். 

பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி என பவுலிங் யூனிட் அபாரமாக உள்ளது. விஜய் சங்கர், ராகுல், தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா என மிடில் ஆர்டரும் வலுவாகவே உள்ளது. நான்காம் வரிசையில் விஜய் சங்கர் அல்லது ராகுலை இறக்கும் விதமாக இருவருமே அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். இருவரில் யார் இறங்கப்போகிறார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. 

இந்த முறை பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறந்த மற்றும் எதிரணிகளின் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஆடக்கூடிய ஆக்ரோஷமான அணியுடன் உலக கோப்பைக்கு செல்கிறது இந்திய அணி. அதனால் இந்த முறை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், உலக கோப்பை குறித்து பேசியுள்ள முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எந்த வரிசையிலும் இறங்க தயாராக வேண்டும். அதேநேரத்தில் ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரில் ஒருவர் கண்டிப்பாக களத்தில் நங்கூரம் போட்டு நீண்ட நேரம் ஆட வேண்டும். இந்திய அணி சிறப்பான அணியாக உள்ளது. அணியில் நல்ல டெப்த் உள்ளது. நிறைய தவறுகளை செய்யாதபட்சத்தில் கண்டிப்பாக இந்திய அணி வெல்லும் என்று சேவாக் தெரிவித்துள்ளார். 
 

click me!