உலக கோப்பை 2019: வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்டு, பிராவோ!! தெறிக்கும் எதிரணிகள்

By karthikeyan VFirst Published May 20, 2019, 1:53 PM IST
Highlights

ஐசிசியின் அனுமதி இல்லாமல் 22ம் தேதி வரை அணியை மாற்றிக்கொள்ளலாம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சிலர் காயமடைந்திருப்பதால், 10 ரிசர்வ் வீரர்களின் பட்டியலை வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியிட்டுள்ளது. 
 

உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து தான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் ஆக்ரோஷமாக ஆடி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பல முன்னாள் ஜாம்பவான்கள் கணித்துள்ளனர். 

இந்த அணிகளின் மீதே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எனினும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுமே நன்றாகவே உள்ளன. 

உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. எனினும் ஐசிசியின் அனுமதி இல்லாமல் 22ம் தேதி வரை அணியை மாற்றிக்கொள்ளலாம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் சிலர் காயமடைந்திருப்பதால், 10 ரிசர்வ் வீரர்களின் பட்டியலை வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியிட்டுள்ளது. 

அதில், ஐபிஎல்லில் கலக்கிய அனுபவ வீரர்கள் பிராவோ மற்றும் பொல்லார்டு ஆகிய இருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த இவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இணைந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி கூடுதல் பலம் பெறும். 

ஏற்கனவே கெய்ல், ஆண்ட்ரே ரசல், ஷாய் ஹோப் ஆகிய சிறந்த வீரர்கள் அணியில் இருக்கும் நிலையில், பொல்லார்டு மற்றும் பிராவோ ஆகிய அனுபவ வீரர்களும் அணியில் இணைந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகச்சிறந்த அணியாகிவிடும். உலக கோப்பை நடக்கும் இங்கிலாந்து ஆடுகளங்கள், பேட்டிங்கிற்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அப்படியிருக்கையில், வலுவான பேட்டிங் ஆர்டருடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இறங்க வாய்ப்புள்ளது. 
 

click me!