PAK vs SL: ஹைதராபாத்தில் சாதனை: மைதான பராமரிப்பாளர்களுக்கு ஜெர்சியை பரிசாக அளித்து மரியாதை செய்த பாபர் அசாம்!

By Rsiva kumar  |  First Published Oct 11, 2023, 1:32 PM IST

உலகக் கோப்பையில் 344 ரன்களை சேஸ் செய்து பாகிஸ்தான் புதிய சாதனை படைத்ததைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் மைதான பராமரிப்பாளர்களுக்கு ஜெர்சியை பரிசாக அளித்து கேப்டன் பாபர் அசாம் மரியாதை செய்துள்ளார்.


பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பையின் 8ஆவது லீக் போட்டி தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் ஆடியது. இதில் குசால் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரமா ஆகியோரது அதிரடியான சதம் காரணமாக இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 344 ரன்கள் குவித்தது.

கொச்சி லுலு மாலில் உலக கோப்பை கிரிக்கெட் முன்னிட்டு பாகிஸ்தான் தேசியக் கொடி சர்ச்சை; லுலு குழுமம் மறுப்பு!!

Tap to resize

Latest Videos

பின்னர் கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர் அப்துல்லா ஷபீக் தனது முதல் உலகக் கோப்பையில் விளையாடினார். ஃபகர் ஜமானுக்குப் பதிலாக இந்தப் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். அவருடன் இமாம் உல் ஹக் தொடக்க வீரராக களமிறங்கினார். அவர், 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஷபீக் உடன் முகமது ரிஸ்வான் களமிறங்கி ரன்கள் சேர்த்தனர்.

India vs Pakistan: அகமதாபாத் புறப்பட்டுச் செல்லும் சுப்மன் கில் – IND vs PAK போட்டிக்கு தயாராக திட்டம்?

இதில், ஷபீக் நிதானமாக விளையாடி 103 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உள்பட 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக தனது முதல் உலகக் கோப்பையில் சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி அறிமுக உலகக் கோப்பையிலே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அதன் பிறகு முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் சகீல் இருவரும் இணைந்து ரன்கள் சேர்த்தனர். கடைசியாக சகீல் 31 ரன்களில் வெளியேறவே அடுத்து இப்திகார் அகமது களமிறங்கினார். ஒருபுறம் நிதானமாக தனது கால் வலியையும் பொருட்படுத்தாமல் விளையாடிய முகமது ரிஸ்வான் ஒருநாள் போட்டியில் தனது 3ஆவது சதத்தை பதிவு செய்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஜடேஜா, ராகுல் அண்ட் கோலி – 3ஆவது வெற்றியை நோக்கி இந்தியா!

இறுதியாக முகமது ரிஸ்வான் 131 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்  மூலமாக பாகிஸ்தான் 49.2 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக பாகிஸ்தான் உலகக் கோப்பையில் 2ஆவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது.

 

A note of appreciation to the Hyderabad ground staff 🤝 | pic.twitter.com/XAfWzlrxaI

— Pakistan Cricket (@TheRealPCB)

 

இந்த நிலையில், ஹைதராபாத்தில் அதிக ரன்களை சேஸ் செய்து பாகிஸ்தான் புதிய சாதனை படைக்க போதுமான வசதிகளை செய்து கொடுத்து சிறப்பாக விளையாட உதவிய மைதான பராமரிப்பாளர்களு மரியாதை செய்யும் வகையில் பாபர் அசாம் ஜெர்சியை பரிசாக வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவர்களுடன் இணைந்து பாகிஸ்தான் வீரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

18 ஒய்டா, நொந்து போன கேப்டன் ஷனாகா – தோல்விக்கு இது தான் காரணம்!

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

 

click me!