T20 WC: பாபர் அசாம் - ரிஸ்வான் அரைசதம்.. அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது பாகிஸ்தான்

By karthikeyan V  |  First Published Nov 9, 2022, 4:59 PM IST

டி20 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது பாகிஸ்தான்.
 


டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்று சிட்னியில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தும் பாகிஸ்தானும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே அணியுடன் தான் இந்த போட்டியில் களமிறங்கின.

Tap to resize

Latest Videos

undefined

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், லாக்கி ஃபெர்குசன்.

டி20 உலக கோப்பை: ஷர்ஷல் படேல் பவுலிங்கில் அடிவாங்கி மைதானத்தில் மண்டியிட்ட கோலி.! அரையிறுதிக்கு முன் பதற்றம்

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இஃப்டிகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலனை 4 ரன்னுக்கு முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் ஷாஹீன் அஃப்ரிடி. நன்றாக ஆடி நல்ல தொடக்கத்தை பெற்ற டெவான் கான்வே, பவர்ப்ளேயின் கடைசி பந்தில் 21 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேற, க்ளென் ஃபிலிப்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

49 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்த நிலையில், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சனும் டேரைல் மிட்செலும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 4வது விக்கெட்டுக்கு 68 ரன்களை குவித்தனர். சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதத்தை நெருங்கிய வில்லியம்சன், நன்றாக செட்டில் ஆகிய நிலையில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த டேரைல் மிட்செல், 35 பந்தில் 53 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து அணி 20 ஓவரில் 152 ரன்கள் அடிக்க உதவினார்.

T20 World Cup: இவர் சரிப்பட்டு வரமாட்டார்.. அரையிறுதியில் அவரை ஆடவைங்க! இந்திய அணிக்கு கபில் தேவ் அட்வைஸ்

153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் அசாம் முதல் ஓவரில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை நியூசிலாந்து விக்கெட் கீப்பர் டெவான் கான்வே  தவறவிட்டார்.  அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆடினார். இந்த தொடரில் ஃபார்மில் இல்லாமல் இருந்துவந்த பாபர் அசாம் இந்த போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். நியூசிலாந்து அணியின் ஃபீல்டிங் படுமோசமாக இருந்தது. பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை குவித்தனர். பாபர் அசாம் 53 ரன்களுக்கும், ரிஸ்வான் 57 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஆனால் இலக்கிற்கு அருகே கிட்டத்தட்ட அழைத்துச்சென்றதால் கடைசி ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, ஃபைனலுக்கு முன்னேறியது. 
 

click me!