டி20 உலக கோப்பையில் இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு..!

By karthikeyan VFirst Published Oct 23, 2021, 5:14 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான சூப்பர் 12 சுற்று போட்டிக்கான 12 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை.  கடந்த பல ஆண்டுகளாகவே இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

அதனால் உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிகள் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்களே இந்த போட்டியை கான ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

உலக கோப்பை தொடர்களில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை. இந்தியாவை உலக கோப்பைகளில் வீழ்த்தியதேயில்லை என்ற அழுத்தமே இந்தியாவை எதிர்கொள்ளும்போது பாகிஸ்தானுக்கு எமனாக அமைந்துவிடுகிறது.

அந்தவகையில், இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில், உலக கோப்பை தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிரான 100% வின்னிங் ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும், உலக கோப்பையில் முதல் முறையாக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தானும் களமிறங்குகின்றன.

நாளை(24ம் தேதி) இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நடக்கவுள்ள நிலையில், இந்த போட்டிக்கான 12 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபர்  அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான் ஆகிய இளம் வீரர்களும், சீனியர் வீரர்களான முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் இமாத் வாசிம், ஷதாப் கான் ஆகியோரும் சீனியர் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹசன் அலியும் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க - கேப்டன்சியிலிருந்து விலகச்சொல்லி நாங்க அழுத்தம் கொடுத்தோமா? யாருடா இதெல்லாம் கிளப்பிவிடுறது? கங்குலி விளக்கம்

ஆசிஃப் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

12 வீரர்களை கொண்ட பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, ஹைதர் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ராஃப்.
 

click me!