#T20WorldCup சூப்பர்12 சுற்றின் முதல் போட்டி! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸி.,யின் அதிரடி முடிவு

By karthikeyan VFirst Published Oct 23, 2021, 3:30 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அபுதாபியில் நடக்கிறது.

வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இரு அணிகளுமே களமிறங்குகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஸ்மித் ஆகிய வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ள நிலையில், டாப் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேன் வார்னர் அண்மைக்காலமாக மோசமான ஃபார்மில் இருப்பது பின்னடைவு. பவுலிங்கை பொறுத்தமட்டில் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோர் டாப் கிளாஸ் பவுலர்கள். ஹேசில்வுட் அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக அருமையாக பந்துவீசியிருக்கிறார். அதனால் அதே தன்னம்பிக்கையுடன் டி20 உலக கோப்பையில் ஆடுகிறார்.

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஸாம்பா.

தென்னாப்பிரிக்க அணியில் வாண்டர் டசன் மற்றும் மார்க்ரம் ஆகிய இருவரும் நல்ல ஃபார்மில் ஆடுவதால், இவர்கள் இருவரும் பேட்டிங்கில் நம்பிக்கையளிக்கின்றனர். மோசமான ஃபார்மில் இருக்கும் டி காக் மற்றும் டேவிட் மில்லர் ஆகிய இருவரும் நன்றாக ஆடவேண்டியது அவசியம். ரபாடா, நோர்க்யா என மிரட்டலான ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட தென்னாப்பிரிக்க அணிக்கு, ஃபாஸ்ட் பவுலிங் மிகப்பெரிய பலம்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா(கேப்டன்), மார்க்ரம், ரசி வாண்டர் டசன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசன், ட்வைன் பிரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்க்யா, டப்ரைஸ் ஷாம்ஸி.
 

click me!