அடுத்தடுத்த போட்டிகளில் பார்ல் ராயல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி!

Published : Jan 14, 2023, 12:31 PM IST
அடுத்தடுத்த போட்டிகளில் பார்ல் ராயல்ஸ், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெற்றி!

சுருக்கம்

நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா டி20 போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியும், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன.  

தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ20 எனப்படும் டி20 தொடர் நடந்து வருகிறது. இதில், மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. கடந்த 11 ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு நடந்த 4ஆவது போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், பார்ல் ராயல்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி:

ரீஸா ஹென்ரிக்ஸ், ஜே மலான், ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), கைல் வெரெய்ன்,  லெவிஸ் க்ரெகெரி, டோனவன் ஃபெரைரா, ரொமாரியோ ஷெஃபெர்டு, ஜார்ஜ் கார்ட்டான், அல்ஸாரி ஜோசஃப், லிஸாட் வில்லியம்ஸ், ஆரோன் ஃபாஞ்சிஸோ.

பார்ல் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், விஹான் லப்பே, டேவிட் மில்லர் (கேப்டன்), டேன் விலாஸ், இயன் மோர்கன், ஃபெரிஸ்கோ ஆடம்ஸ், இவான் ஜோன்ஸ், ஃபார்ச்சூன், லுங்கி இங்கிடி, டப்ரைஸ் ஷம்ஸி.

மீண்டும் வாய்ப்பு கொடுத்த ரஞ்சி டிராபி சாதனை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணியில் இடம் பிடித்த பிரித்வி ஷா!

அதன்படி முதலில் ஆடிய ஜோபர்க் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் வில்லியம்ஸ் மட்டும் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார். இறுதியாக 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜோபர்ஸ் சூப்பர் கிங்ஸ் அணி 81 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சில் பார்ல் ராயல்ஸ் அணியில் ஃபார்ச்சூன் மற்றும் இவான் ஜோன்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆடாம்ஸ் 2 விக்கெட்டுகளும், நிகிடி, ஷாம்சி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பறினர்.

வனப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் கிரிக்கெட் வீராங்கனை: அணியில் இடம் பெறாதது தான் காரணமா?

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய பார்ல் ராயல்ஸ் அணி 10.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் ஃபார்ச்சூன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தப் போட்டியைத் தொடர்ந்து நடந்த 5ஆவது போட்டியில் எம் ஐ கேப்டவுன் அணியும், டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டர்பன் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய எம் ஐ கேப்டவுன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. எம் ஐ கேப்டவுன் அணியில் ரோலோப்சென் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சில் டர்பன் அணி சார்பில் டாப்லே, வில்ஜோயன், சுப்ராயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மாயர்ஸ் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Hockey World Cup 2023: இன்றைய போட்டியில் அடுத்தடுத்து பலப்பரீட்சை நடத்தும் டீம் என்னென்ன தெரியுமா?

இதையடுத்து 153 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி விளையாடியது. இதில், முல்டர் 30 ரன்களும், மாயர்ஸ் 34 ரன்களும், கிளாசன் 36 ரன்களும், பால் 20 ரன்களும், ஹோல்டர் 11 ரன்களும் எடுக்க டர்பன் அணி 16.3 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழந்து 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் கேல் மாயர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு!

இன்று நடக்கும் 6ஆவது போட்டியில் பிர்ட்டோரியா கேபிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மோதுகின்றன. 7ஆவது போட்டியில் எம் ஐ கேப்டவுன் அணியும், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!