3வது போட்டிக்கான இந்திய அணி.. அணி நிர்வாகம் அதிரடி முடிவு

By karthikeyan VFirst Published Mar 8, 2019, 1:24 PM IST
Highlights

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்தார். 
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பவுலிங்கை தேர்வு செய்தார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி, டி20 தொடரை 2-0 என வென்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

மூன்றாவது போட்டி ராஞ்சியில் நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமார் இந்த போட்டியில் அணியில் இணைந்துள்ளார். அதனால் ஆடும் லெவனில் அவர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய அதே அணியே ஆடுகிறது. இந்த போட்டியில் வென்றால் தொடரை வென்றுவிடலாம் என்பதால் அணியில் எந்த மாற்றமும் செய்ய அணி நிர்வாகம் விரும்பியிருக்காது. 

அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. நாதன் குல்டர்நைலுக்கு பதிலாக ரிச்சர்ட்ஸன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பும்ரா.

ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), ரிச்சர்ட்ஸன், பாட் கம்மின்ஸ், நாதன் லயன், ஸாம்பா.

இரண்டு டி20 போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த போட்டியில் தான் விராட் கோலி டாஸ் வென்றார். இதற்கு முந்தைய அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் தான் டாஸ் வென்றார்.
 

click me!