ஸ்மித் - வார்னருக்கு அணியில் இடம் இல்லை!! ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Mar 8, 2019, 12:46 PM IST
Highlights

கேப்டனாக இருந்த ஸ்மித் மற்றும் துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் தடை விதிக்கப்பட்டதால், ஆரோன் ஃபின்ச்சின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி கடந்த ஓராண்டாக ஆடிவருகிறது. 
 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர மற்றும் முன்னணி வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 

கேப்டனாக இருந்த ஸ்மித் மற்றும் துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் தடை விதிக்கப்பட்டதால், ஆரோன் ஃபின்ச்சின் தலைமையில் ஆஸ்திரேலிய அணி கடந்த ஓராண்டாக ஆடிவருகிறது. 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாததால், தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம், பெரியளவில் சொல்லும்படியாக இல்லை. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், ஸ்மித் மற்றும் வார்னருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடை முடிய உள்ளது. 

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுகிறது. இதற்கிடையே ஸ்மித் மற்றும் வார்னர் மீதான தடை வரும் 28ம் தேதியுடன் நிறைவடைகிறது. 

மார்ச் 29ம் தேதி ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நடக்க உள்ளது. அதனால் கடைசி 2 போட்டிகளுக்கான அணியில் ஸ்மித்தும் வார்னரும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் ஸ்மித் மற்றும் வார்னர் இடம்பெறவில்லை.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்மித்தும் வார்னரும் இல்லை. அதேநேரத்தில் அவர்கள் உலக கோப்பையில் ஆடுவது உறுதிதான். அவர்கள் இருவரின் வருகையை ஆஸ்திரேலிய அணி மட்டுமல்லாமல் அந்த நாடே எதிர்நோக்கி காத்திருக்கிறது. உலக கோப்பைக்கு முன்னதாக ஸ்மித்தும் வார்னரும் ஐபிஎல்லில் ஆட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

ஃபின்ச்(கேப்டன்), அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ்(துணை கேப்டன்), பெஹ்ரெண்டோர்ஃப், நாதன் குல்டர்நைல்,  ஹேண்ட்ஸ்கம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்ஸன், கேன் ரிச்சர்ட்ஸன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டர்னர், ஸாம்பா.

click me!