#ICCWTC ஃபைனல்: நியூசிலாந்துக்கு சாதகமான டாஸ்.. வில்லியம்சன் செம குஷி..! இந்திய அணி முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Jun 19, 2021, 2:56 PM IST
Highlights

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். எனவே இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
 

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நேற்று தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்தானது. இந்நிலையில், இன்று போட்டி தொடங்கியது. சவுத்தாம்ப்டனில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது.

டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இங்கிலாந்து கண்டிஷன் பொதுவாகவே ஸ்விங்கிற்கு சாதகமாக இருக்கும். அதிலும் மழை பெய்து வானிலை மந்தமாக இருப்பதால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும். டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், வாக்னர், ஜாமிசன் என நல்ல ஃபாஸ்ட் பவுலிங் படையுடன் களமிறங்கும் நியூசிலாந்து அணி, இந்திய அணியை சொற்ப ரன்களில் சுருட்டும் முனைப்பில் இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இங்கிலாந்தில் ஸ்விங் பவுலிங்கை எதிர்கொண்டு ஆடுவது சவாலான காரியம். எனவே அந்த சவாலை எடுத்த எடுப்பில் இந்திய அணிக்கு கொடுத்துள்ளது நியூசிலாந்து அணி. இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று முன் தினமே அறிவிக்கப்பட்டுவிட்டது. கண்டிஷனுக்கு ஏற்ப இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்று பேசப்பட்டது. ஜடேஜாவிற்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக ஹனுமா விஹாரி சேர்க்கப்படலாம் என்று பேசப்பட்டது. ஆனால் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அறிவிக்கப்பட்ட அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் சர்மா, ஷமி, பும்ரா.

நியூசிலாந்து அணி முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுடன் மட்டுமே ஆடுகிறது. ஒரு ஸ்பின்னரை கூட அணியில் எடுக்கவில்லை. 

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன்(கேப்டன்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், வாட்லிங்(விக்கெட் கீப்பர்), காலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜாமிசன், நீல் வாக்னர், டிம் சௌதி, டிரெண்ட் போல்ட்.
 

click me!