#BANvsNZ தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான டி20 போட்டி..! நியூசிலாந்து அணியின் அதிரடி முடிவு

Published : Sep 08, 2021, 03:46 PM IST
#BANvsNZ தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான டி20 போட்டி..! நியூசிலாந்து அணியின் அதிரடி முடிவு

சுருக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  

நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. முதல் 3 போட்டிகளில் வங்கதேச அணி இரண்டிலும், நியூசிலாந்து அணி ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளன. 

வங்கதேச அணி 2-1 என முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20, இன்று நடக்கிறது. தாக்காவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்தபோதிலும், 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங் ஆட தீர்மானித்துள்ளது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து அணி:

ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, வில் யங், டாம் லேதம்(விக்கெட் கீப்பர், கேப்டன்), காலின் டி கிராண்ட் ஹோம், ஹென்ரி நிகோல்ஸ், டாம் பிளண்டெல், கால் மெக்கான்ச்சி, அஜாஸ் படேல், பிளைர் டிக்னெர், ஹமீஷ் பென்னெட்.

வங்கதேச அணி:

முகமது நயீம், லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம், மஹ்மதுல்லா(கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், நுருல் ஹசன்(விக்கெட் கீப்பர்), மஹெடி ஹசன், முகமது சைஃபுதீன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், நசும் அகமது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!