மனைவியை பிரிந்தார் ஷிகர் தவான்..! விவகாரத்து தொடர்பாக இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை இட்ட ஆயிஷா

Published : Sep 08, 2021, 10:22 AM IST
மனைவியை பிரிந்தார் ஷிகர் தவான்..! விவகாரத்து தொடர்பாக இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை இட்ட ஆயிஷா

சுருக்கம்

ஷிகர் தவான் அவரது மனைவி ஆயிஷாவை பிரிந்துள்ளார். இருவருக்கும் விவாகரத்து ஆனதை ஆயிஷா அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான். இவர் கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான மற்றும் 2 குழந்தைகளுக்கு தாயான ஆயிஷாவை திருமணம் செய்துகொண்டார்.

ஃபேஸ்புக்கில் ஹர்பஜன் சிங்கின் நட்பு வட்டாரத்தில் இருந்த ஆயிஷாவை பார்த்து பிடித்துப்போன ஷிகர் தவான், அவருடன் நட்பாகி பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான ஆயிஷாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர். விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்ய ஷிகர் தவான் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் தவான், ஆயிஷாவை திருமணம் செய்துகொண்டார்.

9 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவந்த இவர்கள் இப்போது விவாகரத்து செய்து பிரிந்து சென்றுள்ளனர். அந்த தகவலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஆயிஷா, 2வது முறையாக விவாகரத்து செய்வதற்கு முன்புவரை, விவாகரத்து என்ற வார்த்தைய மோசமான வார்த்தையாக கருதியாக பதிவிட்டுள்ளார்.

 

முதல் முறை விவாகரத்து செய்தபோது, குற்ற உணர்ச்சியாக இருந்ததாகவும், ஆனால் இப்போது 2வது முறையாக விவாகரத்து செய்தபோது அதை எளிதாக கடந்து சென்றுவிட்டதாக ஆயிஷா பதிவிட்டுள்ளார்.

”விவாகரத்து என்பது திருமணம் என்ற பெயரில் என்னுடைய வாழ்க்கையை பிறருக்கு அர்ப்பணிக்காமல் என்னை தேர்ந்தெடுப்பது ஆகும்” என்று பதிவிட்டுள்ள ஆயிஷா, ஒரு உறவை முறிக்க முடியாமல் பயப்படுகிறீர்களா அல்லது சிரமத்தை அனுபவிக்கிறீர்களா எனக்கு தனி செய்தி அனுப்புங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 5-வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இடம்.. பயிற்சியாளர் சொன்ன முக்கிய அப்டேட்!
திடீரென முடங்கிய விராட்டின் இன்ஸ்டா அக்கவுண்ட்.. அனுஷ்கா ஷர்மாவின் கமெண்ட்ஸ் பேஜில் கதறும் ரசிகர்கள்..