IND vs NZ 2வது டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Dec 2, 2021, 7:11 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான நியூசிலாந்து அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்டதொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது டெஸ்ட் போட்டி நாளை(டிசம்பர் 3) மும்பை வான்கடேவில் தொடங்குகிறது.

இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி தொடரை வெல்லும். மேலும், இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளுமே களமிறங்கும்.

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், கண்டிஷனுக்கு மதிப்பளித்து நியூசிலாந்து அணி 3 ஸ்பின்னர்களுடன் ஆடியது. ஆனால் அஜாஸ் படேலைத்தவிர, மற்ற 2  ஸ்பின்னர்களான சோமர்வில் மற்றும் ராச்சின் ரவீந்திரா ஆகிய இருவரும் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஆனால் பேட்டிங்கில் அவர்களின் பங்களிப்பால் தான் நியூசிலாந்து அணி போட்டியை டிரா செய்தது.

ஆனாலும், மும்பை வான்கடேவில் நடக்கும் 2வது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி ரவீந்திரா - சோமர்வில் ஆகிய இருவரில் ஒருவரை நீக்கித்தான் ஆகவேண்டும். அப்போதுதான் கூடுதல் ஃபாஸ்ட் பவுலராக நீல் வாக்னரை சேர்க்கமுடியும். அந்த நீக்கப்படும் வீரர் பெரும்பாலும் ராச்சின் ரவீந்திராவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. 

காரணம், சோமர்வில் மற்றும் ரவீந்திரா ஆகிய இருவரும் நன்றாக பேட்டிங் ஆடினாலும், முதல் டெஸ்ட்டில் ரவீந்திராவிற்கு அதிகமான ஓவர்கள் கொடுக்கப்படவில்லை. ரவீந்திராவை காட்டிலும் சோமர்வில்லை நியூசிலாந்து அணி சிறந்த ஸ்பின்னராக பார்க்கிறது. அதுமட்டுமல்லாது, அஜாஸ் படேல் இடது கை ஸ்பின்னர் என்பதால், ஒரு வலது கை ஆஃப் ஸ்பின்னரை எடுத்தால் காம்பினேஷன் சரியாக இருக்கும். அந்தவகையில், சோமர்வில் ஆடுவார். நீல் வாக்னர் சேர்க்கப்படுவதால் ராச்சின் ரவீந்திரா நீக்கப்படுவார்.

உத்தேச நியூசிலாந்து அணி:

டாம் லேதம், வில் யங், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகோல்ஸ், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), வில்லியம் சோமர்வில், கைல் ஜாமிசன், டிம் சௌதி, நீல் வாக்னெர், அஜாஸ் படேல்.
 

click me!